Thursday, June 14, 2012

மனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்று - இயக்குனர்)


''தேசிய விருது பெற்ற இயக்குநர் நீங்கள். அந்தப் பேரை அடுத்தடுத்த படங்கள்ல தக்கவைக்க நிறையப் போராட வேண்டி இருக்குமே?''
''எதிர்க் காற்றுனு தெரியுது... அதுக்காக சைக்கிள் மிதிக்காம இருக்கிறோமா என்ன? மாட்டுவண்டிகூட போற போக்குல, தான் போனதுக்கு அடையாளமாத் தடம் பதிச்சிடுது. நாம மனுஷங்க... சும்மா சாகலாமா? மிகப் பெரிய சந்தையில கண்ணு தெரியாத ஒரு கிழவியும் பூ வித்துப் பொழைக்குதுதானே... அந்த மாதிரி எனக்கும் நல்லதா அமையும்!''

நிஜம்தானே தோழா ! இன்று சாப்ட்வேர் கம்பெனியில் குப்பை கொட்டும் நா(ம்)ன் இதை பற்றியெல்லாம் நினைத்து பார்க்க முடிவதில்லை....ஒரு சூழலில் சிக்கி கொண்டு எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். சிறு வயதில் வானத்தை வளைப்பேன் என்று கனவு கண்டேன், ஆனால் இன்று EMI கட்ட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் உள்ளது. ம்ம்ம்...அது ஒரு கனா காலம். 

No comments:

Post a Comment