Friday, June 15, 2012

மறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்

சீனா என்றதுமே நும்  வருவது அந்த சீனா பெருஞ்சுவர் மற்றும் உணவுகள். நான் ஷான்காய்  சென்று இருந்த போது (மொத்தம் 20 முறைக்கு மேல் இதுவரை சீனா சென்று இருக்கிறேன்), எனது அமெரிக்க நண்பர்கள் பெய்ஜிங் செல்ல வருமாறு, என்னையும் அழைத்தார்கள். அப்போதிலிருந்தே அந்த பெருஞ்சுவர் மண்டையில் ஓட ஆரம்பித்து விட்டது. புல்லெட் ட்ரெயினில் 200km வேகத்தில் பயணம் செய்து பெய்ஜிங் சென்று அடைந்தோம். 



எங்களுக்காக திரு.சாண் அவர்கள் கைடு எல்லாம் எஅற்பாடு செய்து இருந்தார். அடுத்த நாள், ஒரு பெண் கைடு எங்களை ஹோடேலில் சந்தித்து எங்களுக்கு டூர் ப்ரோக்ராம் பற்றி சொல்லி ஆரம்பித்தார். சீனாவில் ஒரு சங்கடம் என்னவெனில் பாஷைதான் ! அதுவும் பெய்ஜிங் நகரில் மிக சிலருக்குதான் ஆங்கிலம் தெரியுமாதலால், நாம் வழி தவறி விட்டால் போச்சு.....சங்குதான் !


ஒரு வழியாக, நாங்கள் சீனா பெருஞ்சுவரை சென்றடைந்தோம் ! அது ஒரு பரவச அனுபவம்....அந்த இடத்தை நாங்கள் அடைந்து நடக்க ஆரம்பித்தபோது இதற்காக எத்தனை பேர் கஷ்டப்பட்டு இருப்பார்கள், எந்த விதமான சூழலில் இதை உருவாக்கி இருப்பார்கள் என்பதை நாம் எண்ணி பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் வருவதை தவிர்க்க முடியாது. ஒவ்வொரு சுவரம் ஒரு வாட்ச்டோவேர் மூலம் இணைக்க படுகிறது. நான் ஒரு வாட்ச்டோவேரில் இருந்து இன்னொரு வாட்ச்டோவேற்கு செல்வதுற்குள் தலை சுத்தி எனக்கு வந்தி வந்துவிட்டது. அவளவு பிரஷர் இருந்தது அங்கு. நமக்கே இப்படி என்றால், அந்த சுவரை உருவாக்கும் போது  எப்படி இருந்து இருக்கும், எவளவு பேருக்கு உடல்நிலை பதிக்க பட்டு இருக்கும். உண்மையிலேயே அது ஒரு உலகாதிசயம்தான் !!




அடுத்து நங்கள் சென்றது போர்பிட்டேன் பேலேஷ். அந்த காலத்து ராஜா வாழ்ந்த இடம். ஐந்து முதல் ஆறு அடுக்கு வரை உள்ள பாதுகாப்பான, அழகிய ஒரு அரண்மனை. நமது ஸ்ரீரங்கம் கோவிலில் நீங்கள் பார்த்து இருக்கலாம், உள்ப்ரகரம் அதை தண்டி சென்றால் அடுத்த சுற்று பிரகாரம் என்று, அது போலவே இங்கேயும். முதல் பிரகாரத்தில் மக்கள் அரசரை சந்திக்கலாம், அடுத்து புலவர்கள், அடுத்து மந்திரிகள் என்று. கடைசி பிரகாரம்தான் அந்தபுறம் !! ரொம்ப சேபாதான் ராணிய வச்சிருந்திருகாங்க !


மேலே நீங்கள் பார்ப்பது ஒரு கோவில். எல்லா கோவிலிலும் ப்ளூ மற்றும் சிகப்பு நிறமே அதிகம் இருந்தது. மிகவும் நுணுக்கமான வேலைபாடுகள்.

மொத்தத்தில் சீனாவில் நாம் பார்க்க நிறைய இருக்கிறது, ஆனால் உங்களுக்கு பாஷை தெரியாவிட்டால் அவளவுதான்.


No comments:

Post a Comment