Saturday, June 16, 2012

மறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்

எப்போதுமே வாழ்வில் சில பயணங்கள் மறக்க முடியாமல், என்றுமே நினைத்து நினைத்து ரசிக்கும் படியாக இருக்கும். அது போல ஒரு பயணம்தான் இந்த ஸ்டார் க்ரூஸ் - சொகுசு கப்பல் பயணம். எப்போதுமே கடல் என்பது எனக்கு ஆச்சர்யம் கொடுக்கும் ஒரு அம்சம். ஆனால்  இதுவரை கடலை கரையில் இருந்து பார்த்ததுண்டு, அல்லது விமானத்தில் செல்லும்போது மேலே இருந்து பார்த்ததுண்டு, அனால் இதுதான் முதல் முறை, கடலின் உள்ளே சென்று பார்ப்பது.

டிக்கெட் ரீசெர்வு செய்து விட்டு நான் செய்த அழும்பில் வீடுகாரம்மா சற்று மிரண்டு போனார்கள், அந்த அளவு அதை பற்றியே பேசி கொண்டு இருந்தேனாம் ! அந்த நாளும் வந்தது, டிக்கெட் என்பது ஒரு சின்ன கிரெடிட் கார்டு போல இருப்பது . கப்பலில் கால் வைத்தவுடன், ஒரு சின்ன குழந்தையை போல ஓடி கொண்டு இருந்தேனாம். கப்பல் கிளம்பும்போது வெளியில் டாட்டா கட்டினேன் என்றல், எந்த அளவு குழந்தையை போல் இருந்தேன் என்று பார்த்து கொள்ளுங்கள் ! :-)

கப்பலில் நுனியில் போய் நின்று கொண்டு டிடனிக் போஸே கொடுக்க வேண்டும் என்று ஆசை (அது சரி,  விளங்கிடும் என்கிறீர்களா ? ), ஆனால்  பலருக்கு இந்த ஆசை இருந்திருக்க வேண்டும், அதனாலதான் அந்த இடத்துக்கு போகும் பாதையை அடைத்து வைத்து இருந்திருகிறார்கள். அட சை, ஒரு நல்ல போட்டோ மிஸ் ஆகிடுச்சே.


கப்பலில் எல்லா வசதியும் உண்டு. பயணம் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் இருக்கும் பெனாங் தீவுக்கும், தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவிற்கும். மூன்று இரவுகள், நான்கு பகல்கள் பயணம். நீச்சல் குளம், தியேட்டர், 24 மணி நேர உணவு கூடம், இரவில் ஸ்பெஷல் ஷோவ்கள், பல வித விளையாட்டு கூடம் என்று எல்லா வசதியும் இருந்தது. முக்கியமாக, உங்களுடைய கை பேசியும், பணமும் நீங்கள் எடுத்து கொள்ளவே வேண்டாம். கைபேசிக்கு சிக்னல் கிடைக்காது, பணத்திற்கு பதில் அந்த டிக்கெட் (அது கிரெடிட் கார்டு போல), எங்கே வேண்டும் எட்ரளும் நீங்கள் பயன் படுத்தி கொள்ளலாம், ஆனால்  இறங்குவதற்கு முன்னால் நீங்கள் அதை பே  செய்தல் போதும். அப்பாடா, என்று நீங்கள் பீல் செய்வது நிச்சயம்.

சூரியோதயம் மற்றும் சூரியச்தமணம் என்பது நீங்கள் நிச்சயம் ரசிக்க  வேண்டிய ஒன்று. அதுவும் நாங்கள் சென்றது ஒரு நல்ல பௌர்ணமியில், ஆதலால் மனைவியுடன் கப்பலின் மேல் தளத்தில் இரவில் கடல் காற்றில் முழு நிலவை ரசிப்பது என்பது சொர்க்கம்.


பெனாங் மற்றும் புக்கெட்டில் செடன்று சுற்றி பார்த்தது பற்றி இன்னொரு பதிவிடுகிறேன். இந்த கப்பலில், ஒரு மிக பெரிய செஸ் போர்டு இருக்கிறது, நானும் என் மனைவியும் தினமும் ஒரு கேம் ஆடுவோம், பெரும்பாலும் நான் என் மனைவிக்கு விட்டு கொடுத்து விடுவேன் (சரி, சரி ஒத்துக்கிறேன். நாந்தான் தோற்பேன்).


மொத்தத்தில் பதிமூணு அடுக்கு கப்பல், அதில் ஒரு சொர்க்க லோகம் என்றால் அது மிகை ஆகாது. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு professional ஷோ உண்டு. நாங்கள் சென்று இருந்த போது அக்ரோபாட்டிக் மற்றும் காபரெட் ஷோ நடைபெற்றது, ஆனால் நான் அந்த காபரெட் ஷோ பார்க்கவேயில்லை !!! :-)
மொத்தத்தில் இந்த பயணம் என் வாழ்வில் ஒரு மாறாக முடியாத ஒன்றாக இருந்தது.நீங்களும் சென்று வாருங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment