Monday, June 18, 2012

அறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்

இந்த உணவு பகுதி ஆரம்பிக்கும் போது, உள்ளூர் உணவுகளும், நல்ல ரெஸ்டாரன்ட் பற்றி மட்டுமே எழுதலாம் என்று இருந்தேன், ஆனால் எனது நண்பன் அதற்கு கூகிள் உள்ளது, நீ உனது உலக பயணத்தின் போது சாப்பிடவற்றை, அவர்களது கலாச்சாரம் பற்றியும் எழுதேன் என்ற போது அதுவ்வும் சரிதான் என்று தோன்றியது, ஆகவே இதோ....

நான் இது வரை நன்கு முறை ஜப்பான் சென்று இருக்கிறேன், அங்கு என்னை கவர்ந்தது அவர்களின் உண்மையும், நேர்மையும். நீங்கள் ஒரு 1000 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு சென்று, திரும்பவும் அங்கே வந்து தேடி பார்த்தால் அது அங்கே இருக்கும் என்பது நிச்சயம். உலகில் நீ எங்கே வாழ விரும்புகிறாய் என்று கேட்டால், நிச்சயமாக நான் யோசிக்காமல் சொல்வேன் ஜப்பான் என்று. இன்று ஜப்பானிய உணவுகளை பற்றி சொல்லும் போது, உண்மையான ஜப்பான் உணவும், உலகமயமாக்கப்பட்ட ஜப்பான் உணவும் என்று பிரிக்க வேண்டி இருக்கிறது.

உண்மையான ஜப்பான் உணவு என்பது பச்சையாக இருக்கும். ஜப்பானை சுற்றி கடல் இருப்பதால், அங்கு எல்லா விதமான மீன்களும் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அனைவரும் கடல் உணவுகளை விரும்பி உண்பர். நமக்கு எல்லாம், ஜப்பான் என்பதும் நினைவுக்கு வருவது சுஷி என்னும் உணவு வகைதான். அந்த உணவை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பது விதி என்பது ஒரு ஆச்சர்யம் ! என்னென்றால், அந்த உணவை  செய்யும்போது பெண்களின் கை சூடு கூட அந்த உணவின் சுவையை மாற்றி விடும் என்பதால். ஆச்சர்யம்தான் !!.

ஜப்பானில் அரிசி நம்மூர் அரிசி போல அல்லாமல், ஒட்டி கொண்டு இருக்கும். அதை ஒரு வடிவம் கொடுத்து, பின்பு நம்மூர் புதின சட்னி போல் காரமாய் உள்ள ஒன்றை அரிசியின் மேல் தடவி விட்டு, சுத்தமாய் கழுவிய பச்சை மீன் துண்டை அதன் மேல் வைப்பார்கள். அந்த சட்னியில் உள்ள அந்த காரம், மீனில் உள்ள எந்த வகையான கிருமிகளையும் கொன்று விடும். மீனின் சுவைதான் சுஷியின் சுவை. வாங்க நாம சுஷி சாபிடலாம்.


சுத்தமான ஜப்பான் உணவு என்பது பச்சையாக இருக்கும். அது, நூடுல்ஸ் வகைகளுக்கு பொருந்தாது. அவர்கள் எல்லா வகை மீன்களையும் ஆவியில் வேக வைத்து, அல்லது நன்கு சுத்தமாக கழுவி சாப்பிட கொடுப்பார்கள். சில வகையான மீன் வகைகள் உங்கள் பார்வைக்காக...



எல்லாம் சாபிட்டு முடித்த பிறகு, சாப்பிட டிசர்ட் (Dessert) வேண்டுமா என கேட்டனர். அது ஜெல்லி ஊற வாய்த்த பாயாசமாக இருக்கலாம் அல்லது பீளேவர்ட் புட்டிங் ஆகா இருக்கு. நீங்கள் கீழே பார்ப்பது மேங்கோ புட்டிங்.

அந்த வுணவின் சுவை நமக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஜப்பான்னியர்களின் விருந்தோம்பல் என்பதுதான் நாம் ரசிக்கும் விஷயமாக இருக்கும். நமக்கு அவர்கள் பார்த்து பார்த்து பரிமாறுவது, நமது முகத்தினை வைத்து வேண்டியதை தருவது என்று அவர்களின் கலாச்சாரமே தனி.

அவர்கள் நமது ரஜினி படத்தை ரசிப்பதில் இருந்தே தெரிகிறது, கலாசாரம் ஒன்றுதான் என்பது.









No comments:

Post a Comment