Thursday, June 21, 2012

என்ன வேண்டும் உங்களுக்கு ? - கடவுள்

 இந்த நொடி, கடவுள் உங்கள் முன் தோன்றி "உனக்கு என்ன வேண்டும் கேள்,  நான் உனக்கு தருகிறேன்...." என்றால் நீங்கள் என்ன கேட்பீர்கள் ?



நானும் என் நண்பனும், ஒரு நாள் மாலை பொழுதில் சகஜமாக பேசி கொண்டு இருந்தபோது, அவன் மேலே நீங்கள் படித்த அந்த கேள்வியை கேட்டான். உங்களுடைய பதில் உங்கள் வாழ்வை மாற்றி விடும் எனும் போது நீங்கள் என்ன கேட்பீர்கள் அந்த கடவுளிடம் ? என்ன தெரியவில்லையா...நீங்கள் யோசிக்க சிறிது அவகாசம் எடுத்து கொண்டீர்களா ? அப்படியென்றால், உங்களுக்கு என்ன வேண்டு என்று உங்களுக்கே தெரியவில்லையா ? ஆம் என்றால், நானும் அதைத்தான் செய்தேன். என்ன வேண்டும் எனக்கு பணம், மனநிம்மதி, வீடு, உடல் பலம், நோயற்ற வாழ்வு, சந்தோசம் ???????? இதில் ஒன்று இருந்து இன்னொன்று இல்லை என்றால் நமக்கு அதில் நிம்மதி இருக்குமா ?

கடவுள் நமக்கு நாம் விரும்பியதை தருவதற்கு தயாராக இருந்தாலும், நாம் நமக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, கேட்பதற்கு தயாராக இருக்கிறோமா?

நாம் எல்லோரும் பணத்தை தேடித்தான் ஓடி கொண்டு இருக்கிறோம், ஆதலால் ஒரு 100 கோடி கேட்டால் என்ன ? பாரதி சொல்லியது போல் ஒரு தென்னந்தோப்பு, வீடு என்று செட்டில் ஆகி விடலாம் இல்லையா ?



இல்லை, நாம் நமக்கு மனநிம்மதி மட்டும் கேட்கலாமா ? எது இருந்த போதும், அல்லது இல்லையென்றாலும் நமக்கு நிம்மதி மட்டும் இருக்கும். ஆனால், நமது மனைவி மக்களுக்கு நிம்மதி இருக்குமா ?



இல்லை, நமக்கு நோயற்ற வாழ்வு கேட்கலாமா ? நமக்கு ஹோச்பிடல் செலவு மிச்சம். ஆனால், நோய் நமக்கு இல்லை என்றாலே அதுவும் ஒரு நோய்தானே ? நமக்கு காய்ச்சல் வரும்போதுதான் உடல் மீது ஆசையே வருகிறது.



அப்படி என்றால், நாம் நமக்கு என்ன தேவை என்று சரியாக புரிந்து கொண்டுதான் இந்த வாழ்க்கையை வாழ்கிறோமா என்ன ?

வாழ்கையில் நமக்கு என்ன தேவை என்பது தெரியாமல், காட்டாற்று வெள்ளம் ஒரு மரத்தை கொண்டு செல்வது போல நீங்கள் லோன் வாங்கிய பேங்க்ம், உங்களின் சமுக ஸ்டேதசும் உங்களை  கொண்டு சென்று கொண்டு இருந்தால், நமக்கும், தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் ஒரு பைத்தியத்திற்கும் என்ன வித்தியாசம்?



நாம் எல்லோரும் ஒரு சிறிய இலக்கை மட்டுமே கொண்டு முன்னேறுகிறோம், ஒரு வீடு அல்லது கார், அதை அடைந்த போது அடுத்த இலக்கு நிர்னைக்கபடுகிறது. இப்படியாக நாம் இருந்தால், நமக்கு முடிவில் சொத்துக்கள் இருக்கும், ஆனால் அது மட்டும் போதுமா ? ஆக, நமக்கு என்னதான் தேவை ?

யோசித்து விட்டீர்களா ? இப்போது சொல்லுங்கள்....இந்த நொடி, கடவுள் உங்கள் முன் தோன்றி "உனக்கு என்ன வேண்டும் கேள்,  நான் உனக்கு தருகிறேன்...." என்றால் நீங்கள் என்ன கேட்பீர்கள் ?

இந்த பாடலை பாருங்கள்....அஜீத் நிறைய கேட்கிறார் !! :-)


No comments:

Post a Comment