Tuesday, July 17, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் (வட்டியும் முதலும்)

எவ்வளவு பேருக்கு ஆனந்த விகடன் படிக்கும் பழக்கம் இருக்கிறது ?  தமிழ்நாடே வியாழன் காலையில் விகடன் வாங்கி விட்டு சர சரவென்று "வட்டியும் முதலும்" பக்கம் எங்கே இருக்கிறது என்று தேடி படித்து விட்டு, சில நிமிடம் உணர்ச்சி குவியலில் சிக்கி, சில நேரம் கண்ணீர் சிந்தும்.....அது உங்களுக்கு தெரியுமா ?

17-ஆகஸ்ட்-2011 அன்று நான் வழக்கம் போல ஆனந்த விகடன் எடுத்து படித்து கொண்டு இருந்த போது, ஒரு புதிய தொடர் கண்ணில் பட்டது, "வட்டியும் முதலும்". எந்த விதமான எதிர் பரப்பும் இல்லாமல் அதை படிக்கச் ஆரம்பித்த பொழுது அதன் சுழலில் சிக்கி என்னை இழந்தவன் நான். இன்றும் ஒவ்வொரு வியாழன் அன்றும் இதற்காகவே காத்திருந்து படிப்பவன்.ராஜு முருகன், இவர் ஒரு உதவி இயக்குனர், சென்னையில் கனவுகளோடு அலையும் பலரில் இவரும் ஒருவர். இவரை பார்த்தால் நான் எங்கே எனது உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் அழுதுவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது. அவரது ஆளுமையான எழுத்துகள் லட்சோபலட்சம் ரசிகர்களை உருவாக்கி வைத்திருகிறது.இவர் ஒவ்வொரு வாரமும் எடுத்து கொள்ளும் டாபிக்கை நாம் தினமும் பார்ப்பதுதான், ஆனால் அவரது எழுத்தில் சொல்லும்போதுதான் அதில் தெரியாத பல செய்திகள் நமக்கு தெரிய வரும். இது ஒரு முழு புத்தகமாக எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். உதாரணமாக, சென்ற வாரம், இவர் நமக்கு தெரியாமல் நாம் நன்றாக வாழ உதவி செய்யும் மனிதர்களை பற்றி எழுதி இருந்தார். அன்று நான் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, எனது அபார்ட்மென்ட் சாக்கடையை சுத்தம் செய்யும் மனிதர், பேப்பர் போடும் சிறுவன், எனது பைக்கை சுத்தம் செய்து தினமும் ஒரு சிரிப்பை உதிர்க்கும் மனிதர், பால் போடும் ஆள், பூக்கள் கொடுக்கும் அந்த அம்மா, எந்த சந்தேகத்துக்கு இடமான நபரையும் உள்ளே விடாமல் கேட்டில் வெயிலோ மழையோ எப்போதும் நின்றிருக்கும் அந்த வாட்ச்மேன், காய்கறி விற்கும் மூதாட்டி, தினமும் தண்ணீர் சப்ளை செய்யும் ஆள் என்று பலர் உங்கள் நாளை சந்தோசமாக வைத்திருகிறார்கள், நினைத்து பாருங்கள் இவர்களில் ஒருவர் அவர் கடமையை சரியாக செய்யாமல் இருந்தால் ?? நீங்கள் அன்று டென்ஷன் ஆகி, உங்களது ஒரு இனிமையான நாளை இருப்பீர்கள். ஆக, உங்களது ஒவ்வொரு நாளும் இனிமையாய் வைத்திருப்பது இவர்கள்தான். ஆனால், உங்களில் எத்தனை பேர் இவர்களை பார்த்து புன்னகைதிருகிறீர்கள் ???????? இந்த சிந்தனையை தூண்டியதுதான் ராஜு முருகனின் வெற்றி.

எங்கு இருகின்றீர்கள் ராஜு முருகன்? உங்களை சந்திக்கும் நாளை       ஆவலோடு நான் எதிர்பார்க்கிறேன். அன்று உடைந்து நான் அழுதால், தயவு செய்து என்னை தேற்ற முயலாதீர்கள், நான் இது போல் உணர்ச்சிகளை கொட்டி நாள் ஆகி விட்டது, அதுவும் இது பல பல மாதமாய் அடக்கி வைத்திருந்தது. உங்களை நான் சந்திக்கும் அந்த நாளில், நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்.

நண்பர்களே, இவரது தொடரை படியுங்கள். நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். தமிழ்நாடே இவரை விரும்பும்போது நீங்களும் விரும்பமாட்டீர்களா என்ன ?

6 comments:

 1. எனக்கும் அவரது தொடர் மிகவும் பிடிக்கும்.அவரது எழுத்து தாக்கத்தால் தான் நான் வலைப்பதிவு எருத ஆரம்பித்தேன்.மிக அருமையான தொடர்.பதிவிற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில்குமார், நீங்களும் நானும் ஒரே போல் சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வார வியாழனும் அந்த தொடர் படித்துவிட்டு அந்த போதையில் (எழுத்து போதையில்தான்) சிறிது நேரம் என் வாழ்கையை திரும்பி பார்ப்பது மிகவும் சந்தோசமான தருணம். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !

   Delete
 2. நானும் கூட ராஜுமுருகனின் எழுத்தை வாசித்து பலமுறை கண்கலங்கியிருக்கிறேன்

  அறிவுக்கரசன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !

   Delete
 3. kandippaga naan solla ninathathai thaangale solli vitteergal oru ezhuthalarin vetri ithu than

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே....ஒரு எழுத்து எப்படி இதனை மக்களின் இதயத்தை சென்று அடைகிறது என்று நான் வியந்து எழுதிய பதிவு. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete