Tuesday, July 17, 2012

ஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)

இந்தோனேசியாவும் இந்தியாவும் கலைகளில் மற்றும் கலாச்சாரத்தில் ஒன்று போல உள்ளது என்பது எனது அபிப்பிராயம். நமது சென்னைக்கு கிழக்கு பக்கம், ஜாவா சுமத்ரா தீவு கூட்டங்களே இந்தோனேசியா என்று அழைக்க படுகிறது.  இது 17,508 தீவு கூட்டங்கள் அடங்கிய ஒரு நாடு.

நான் பின்டன் தீவு சென்று இருந்தபோது, அவர்களின் நடனத்தை பார்க்க நேர்ந்தது, மிகவும் மெதுவாக நடன அசைவுகளும், இசையும் உள்ள நடனங்கள் அது. நானும் எனது மனைவியும் அவர்களுடன் சிறிது நேரம் ஆடினோம் !!

இந்த நாட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Indonesia


நமது இந்தியாவைபோலவே இங்கும் பல வித நடன வகைகள் உள்ளன. அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.... Dance_in_Indonesia

நாம் இங்கே பார்ப்பது ஜைபோங்கன் டான்ஸ் வகை, இது folk டான்ஸ் வகையை சார்ந்ததாகும். அவர்களது ராமாயண கதைகள் நம் கதைகள் போலவே இருக்கும், ஆனால் பார்பதற்க்கு நமக்கு நிறைய பொறுமை வேண்டும், அத்தனை மெதுவாக ஆடுவார்கள் !!


 நானும் எனது துணைவியும் இந்தோனேசியா ஜைபோங்கன் டான்ஸ் குழுவினருடன். அவர்களின் நடன அசைவுகள் நளினமாக இருந்தது, ஆதலால் நாங்கள் அவர்களுடன் ஆடியது தனி கதை.

அப்போ எப்போ இந்தோனேசியா போக போறீங்க...?!

No comments:

Post a Comment