Saturday, June 23, 2012

கண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்

இன்று நீங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வருவதற்குள் எத்தனை பேர் உங்களுக்கு உதவியாய் இருந்தனர் என்று கூற முடியுமா ? என்ன....ஒருவருமே இல்லையா ? நீங்களாகதான் வந்தீர்களா...அப்படி என்ன உதவி தேவை என்கிறீர்களா ?காலையில் நீங்கள் குளிப்பதற்கு பைப்பில் தண்ணீர் வந்ததா - அப்படி என்றால் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றியவர் யார் ?,   இன்றைய முக்கிய செய்தி படித்தீர்களா அந்த செய்தித்தாளை உங்களுக்கு தினமும் சரியான படி போடுவது யார்?குளித்து முடித்தவுடன் உங்களின் ஷர்ட் மடிப்பு கலையாமல் சரியாக அயன் செய்து இருந்ததா - அப்படி அயன் செய்தது யார் ?, நீங்கள் உண்ணும் உணவை சமைத்தது யார் ? எங்கும் நிற்காமல் நீங்கள் ஓட்டி வந்த உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்தது யார் ? நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, போக்குவரத்தை ஒழுங்கு செய்த போலீஸ்காரர் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்று நினைகிறீர்களா ? இவ்வளவு பேரும் அவர்கள் கடமையை செய்கிறார்கள், ஆனால் அது கடமை மட்டும் அல்ல என்று நமக்கு புரிவதில்லை, அதனால்தான் நாம் அவர்களுக்கு உரிய மரியாதையை தருவதில்லை.

இப்படித்தான் நாம் குதிரைக்கு கண்களை நேரே கட்டி விட்டது போல சென்று கொண்டு இருக்கிறோம், ஒரு நிமிடம் யோசித்தால் நமது கண்ணுக்கு தெரியாமல் பலர் நமக்கு உதவி செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு சின்ன புன்னகையை கூட தருவதில்லை.

உங்களது மேனேஜர் உங்களை பார்த்து தினமும் ஏன் சிரிக்க வேண்டும், நீங்கள் உங்களின் கடமையைதானே செய்கிறீர்கள் அதற்கு ஊதியம் பெறுகிறீர்கள் இல்லையா ? ஆகவே, கடமையை செய்யும்போது நீங்கள் எதிர்பார்க்கும் அதே சிரிப்பை, ஆதரவை உங்களுக்கு தினமும் உதவி செய்யும் மற்றவர்களுக்கு நாம் ஏன் தருவதில்லை ?? உங்கள் வீட்டில் காஸ் தீர்ந்துவிட்டால் உங்களின் பாடு என்னவாகும் ? ஆனால், 15 kg சிலிண்டரை உங்கள் வீட்டுக்கு தூக்கி வந்து போடும் ஆளை நீங்கள் தண்ணீர் கொடுத்து உங்கள் வீட்டு பேன் சுவிட்சை போட்டு உபசரித்தது உண்டா ? அன்று மட்டும் அவர் எத்தனை 15 kg சிலிண்டரை எங்கெங்கு தூக்கி இருக்கிறார் என்று கேட்டதுண்டா ? அவரின் பெயர் தெரியுமா, அவரின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என தெரியுமா ? அது அவர் கடமை மட்டுமே என நினைப்பதால் நாம் இதை என்றும் தெரிந்து கொண்டது இல்லை. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சீட்டிற்கு செல்லும்போது, அது சுத்தமாக இருந்ததா ? தினமும் அதே போல் சுத்தமாக இருக்கிறதா ? இதை யார் செய்தார்கள் என தெரியுமா ? என்றாவது அவரை பார்த்து புன்னகைத்து, அவருக்கு நன்றி சொல்லி இருக்கிறீர்களா ?

உங்களின் காருக்குள் ஏசி போட்டு டிராபிக்கில் இருக்கும்போது, அதே வெயிலில் போக்குவரத்தை வேர்த்து விறுவிறுத்து ஒழுங்கு செய்யும் காவலருக்கு நாம் என்ன செய்கிறோம் ? அவருக்கு சிறுநீர் கழிக்க என்று ஒரே ஒரு நிமிடம் சென்று வந்தால் என்னவாகும் ? அவருக்கு என்ன விதமான மரியாதையை கொடுக்கிறோம் நாம் ?அதிகாலையில் பேப்பர் பிரித்து, பால் லோடு இறக்கி, மார்க்கெட்டில் இருந்து காய் வாங்கி சில்லறையில் விற்கும் என்று பலர் நமக்காகவே உழைக்கின்றனர், அது அவர்கள் கடமை மட்டும் அல்ல. உங்களின் ஒரு நாளை நீங்கள் இனிமையாய் கழித்தால் அது அவர்களின் உதவியால்தான். அவர்களும் மனிதர்கள்தான்....இனி அவர்களை பார்த்தால் உங்களின் புன்னகையை பரிசாக அளியுங்கள். பெயர் சொல்லி அழையுங்கள்."பேப்பர் போடும் பையன்" என தெரிந்த அவனை பெயர் கொண்டு அழைத்தால், அவனின் முகத்தில் தெரியும் சந்தோசத்தை கவனியுங்கள். ஏனென்றால், இந்த உலகத்தில் அழகான ஒலி என்று ஒன்று  இருந்தால்  அது உங்களின் பெயர்தான்.

1 comment:


 1. Bạch y nữ tử này chính là Mộ Dung Hiểu Hiểu, mà cung nữ này chính là tiểu Liên tỳ thiếp của nàng.

  - Công chúa, người đừng có nói đùa với nô tỳ.

  Tiểu Liên cất tiếng nói:
  đồng tâm
  game mu
  cho thuê nhà trọ
  cho thuê phòng trọ
  nhac san cuc manh
  số điện thoại tư vấn pháp luật miễn phí
  văn phòng luật
  tổng đài tư vấn pháp luật
  dịch vụ thành lập công ty trọn gói
  http://we-cooking.com/
  chém gió
  - Chuyện hôm nay có thể lớn, nô tỳ mới biết xong, hôm qua là sinh nhật công tước, quý phi cũng đi, kết quả Đoạn gia bị một hắc bào thanh niên diệt sạch, người của Đoạn gia, kể cả Đoạn công tước cũng đều bị giết ngay cả quý phi cũng bị đánh.

  - Cái gì, là ai có gan lớn như vậy?

  Mộ Dung Hiểu Hiểu biến đổi sắc mặt, đối với chuyện quý phi bị đánh nàng tuyệt đối không quan tâm, phụ hoàng phi tử phần đông nàng đều không để ý.

  Mộ Dung Hiểu Hiểu kỳ quái là tại sao có người dám làm như vậy ở đế đô, thật sự không tưởng tượng nổi.

  - Công chúa, nô tỳ nghe nói là người của phủ Lệnh Hồ công tước làm.

  ReplyDelete