Tuesday, July 17, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தியேட்டர் ஆர்டிஸ்ட்)

ஒரு முறை நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தபோது, ஒருவர் திடீரென்று "எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்து கொண்டு இருக்கிறோம், ஆனால் நம் ஆழ்மனதில் யாரை கண்டிப்பாக நாம் சாகும் முன் சந்திக்க வேண்டும் என நினைக்கிறோம் ? " என கேட்டார். எல்லோரும் ரஜினி, கமல், நமீதா, அப்துல் கலாம் என்று பலரை சொன்னார்கள். அனால் இவர்கள் எல்லோருமே பிரபலங்கள், அப்போது ஒரு கேள்வி எழுந்தது...சிலர் நம்மை பாதித்து இருப்பார்கள், ஆனால்  பிரபலமாக இருக்க மாட்டார்கள். ஆதலால், நாம் ஏன் நாம் சந்திக்க விரும்பும் மனிதர்களை பற்றி எழுதகூடாது என்ற என் எண்ணமே இந்த பதிவு.

ஒருவரை நாம் ஏன் சந்திக்க விரும்புகின்றோம் ? இந்த கால சூழலில், நாம் நம் நண்பர்களை எப்போது நமக்கு தேவை இருக்கிறதோ அப்போது மட்டுமே சந்திக்கிறோம் அல்லது கூப்பிடுகிறோம். என்றாவது நாம் நமது நண்பர்களை எந்த தேவையும் இல்லாதபோது கூப்பிடுகிறோமா ? ஆனால், சில சமயம் சிலரை நாம் சந்திக்க விரும்புகின்றோம், அது சூர்யாவாக இருக்கலாம் அல்லது நமீதாவாக இருக்கலாம், ஆனால்  நாம் ஏன் அவர்களை சந்திக்க விரும்புகிறோம் ? நமக்கு எதாவது தேவையா என்ன ? இல்லை, நாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு இருக்கிறோம். அது போல சிலர் கலையால், குணங்களால் என்று ஈர்கபடுகிறோம். இங்கே என்னை ஈர்த்த, நான் சந்திக்க விரும்பும் மனிதர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பம். நீங்களும் அவர்களை சந்திக்க நினைக்கலாம் இல்லையா ?!

வேலு சரவணன், இவரை பற்றி நான் 5 வருடங்களாக கேள்வி பட்டு வருகிறேன். இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், டாக்டரேட், கோமாளி என்று கேள்வி பட்டு இருக்கிறேன். இவர் சுட்டி விகடனில் அடிக்கடி தென்படுவார். ஒருமுறையாவது இவரின் கூத்தை முதல் வரிசையில் இருந்து பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

இவரின் படங்களை பத்திரிகையில் பார்க்கும்போது, ஒரு விதமான professionalism தெரியும், அதுவும் இந்த காலத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் ஒருவரை பார்ப்பது அறிது, அதுவே எனக்கு ஆவலை தூண்டுகிறது. மக்கள் டிவியில் இவரது வேலு மாமா நிகழ்ச்சியை ஒரு முறை பார்த்தேன், மனிதர் பின்னி எடுக்கிறார்.


ஆனால் இவரை பற்றி கூகுளில் தேடினால் ஒன்றும் சிக்காது. பவர் ஸ்டார் என்று போட்டால் பல பக்கம் வருகிறது, ஆனால்  இவரை பற்றி ஒன்று கூட இல்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

ஒரு நல்ல கலைஞனை விரைவில் சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம், பார்க்கலாம் எப்போது விடிகிறது என்று.

No comments:

Post a Comment