Tuesday, July 17, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிருஷ்ணன் (சோசியல் ஆக்டிவிஸ்ட்)

நிறைய பேர் இந்த "நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" தொடரை படிகிறார்கள் என்று எனது ப்ளோகின் ஸ்டேடஸ் கூறுகிறது, பார்க்க சந்தோசமாய் இருக்கிறது, நன்றி நண்பர்களே.

2010 வருடத்தில் CNN ஹீரோவாக தேர்தேடுக்கபட்டவர் இவர், ஆதலால் நிச்சயமாக உங்களுக்கு இவரை தெரிந்திருக்க நியாயமில்லை !!! இவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன், இவர் பிறந்தது 1981ல் மதுரையில். இவர் சமையல் கலையில் பட்டம் பெற்று பெங்களூரில் இருந்த தாஜ் ஹோட்டலில் தலைமை செப் ஆக இருந்தார். அவருக்கு ஐரோப்பாபில் ஒரு நல்ல வேலை வேறு தேடி வந்திருந்தது.



நல்ல சம்பளம், நல்ல வேலை என்று போய் கொண்டு இருந்த போது, மதுரையில் ஒரு நாள், அவரின் மனதை மாற்றிய சம்பவம் நடந்தது...

ஒரு முதிய பிச்சைக்காரர் பசியால், என்ன செய்வது என்று தெரியாமல் அவருடைய நரகலையே (Human Waste) அவர் சாப்பிட்டார்....அதை பார்த்து அதிர்ந்து போன இவர், உடனடியாக பக்கத்து ஹோட்டலில் இருந்து இட்லி வாங்கி கொடுத்திருக்கிறார். அதை வெகு வேகமாக சாப்பிட்ட அந்த பிச்சைக்காரர் அவரை கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்ட அந்த காட்சி அவரை ஒரு சோசியல் ஆக்டிவிஸ்ட் ஆக மாற்றியது. அவர் அக்ஷ்யா டிரஸ்ட் என்று ஒன்று ஆரம்பித்து இன்று வரை தினமும் 400 பேருக்கு உணவளிக்கிறார், அதுவும் அவர்களை தேடி சென்று....அது மட்டும் இல்லை அவர்களுக்கு முடி வெட்டி விட்டு அவர்களை சுத்தபடுதுகிறார். இந்த வீடியோ பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருவதை என்னால் கட்டு படுத்த முடியவில்லை.



நினைத்து பார்க்கிறேன், நாம் எத்தனை பேருக்கு இது போல உணவளித்து இருக்கிறோம் ?? இவரை சென்று பார்த்து, இவரின் காலில் நான் விழுந்து எழ வேண்டும். திரு.கிருஷ்ணன் அவர்களே உங்களுக்கு என் வணக்கங்கள், விரைவில் உங்களை சந்திக்க ஆசைபடுகிறேன்.

அவரை பற்றி மேலும் அறிந்துகொள்ள இதை சொடுக்குங்கள்...Narayanan_Krishnan

அவரின் தொண்டுக்கு நீங்களும் உதவ விரும்பினால், இங்கே சொடுக்கவும்...Akshya Trust

2 comments:

  1. Dear Mr. Suresh,
    2010 வருடத்தில் CNN ஹீரோவாக தேர்தேடுக்கபட்டவர் இவர், ஆதலால் நிச்சயமாக உங்களுக்கு இவரை தெரிந்திருக்க நியாயமில்லை !!!
    Thanks for writing this, but why you are under estimating others when you have decided to write good heart people? and moreover these aren't new findings, for those who follow news regularly can came across (at least) some of your members you have mentioned it here.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, நீங்கள் சொன்னது போலத்தான் நானும் நினைத்தேன்..... ஆனால் இவரை பற்றி நான் எழுதுவதற்கு முன்பு நான் குறைந்தது நூறு பேரிடமாவது கேட்டிருப்பேன். இணையத்தில் வலைப்பூ படிக்கும் நமக்கு வேண்டுமென்றால் இவரை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் உண்மை என்னவென்றால் பலருக்கும் இவரை பற்றி தெரியாது என்பதே கசப்பான உண்மை. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      ஒன்று தெரியுமா...... நான் எழுதும் இந்த வகை பதிவுகள் வெகு சொற்பமான பார்வையாளர்களையே கொண்டுள்ளது. ஆனால் "சிம்ரனுக்கு தொப்புளில் அடிபட்டது" என்று ஒரு மொக்கை பதிவு போட்டால், ஆயிரம் பேர் பார்க்கின்றனர். இதுதான் உண்மை நண்பரே !

      Delete