Friday, June 22, 2012

நன்பேண்டா !!

இன்று காலையில் எழுந்து எனது மொபைலில் ஒருவருடைய பெயர் தேடும்போது பல பழைய காலேஜ் நண்பர்களின் பெயர்கள் தென்பட்டது. குளித்து முடித்தவுடன் ஒரு ஆர்வத்தில், ஒரு நண்பரின் நம்பரை அழுத்தினேன். அவரின் குரலை எதிர் பார்த்த எனக்கு வேறு ஒருவர் எடுத்தார், அவரின் பெயர் சொல்லி கேட்டதற்கு அது போல இங்கு எவரும் இல்லை என்றார். காலத்தின் ஓட்டத்தில் அந்த நண்பர் நம்பரை மாற்றி விட்டார், அத்துடன் எங்களது தொடர்பு அறுந்து விட்டது. அப்போதிலிருந்து எனது மனம் பின்னோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது.

வாழ்வில் நண்பர்கள் என்பது வரம். மாமா, மச்சான் என்று உறவு முறை சொல்லி, விடியும் வரை பேசி என்று, நன்பேண்டா என கூவுவோம். காலேஜ் படிக்கும் காலத்தில் எல்லாம் நண்பனுக்கு ஒன்றென்றால் ரத்தம் கொதிக்கும், கிராபிக்ஸ் எல்லாம் இல்லாமலே நரம்புகள் புடைக்கும்.

நான் MIT-யில் சேரும்போது லேட்ரல் என்ட்ரி எனப்படும் இரண்டாவது வருடத்தில் சேர்ந்தேன். அப்போது முதல் நாள் கிளாஸ் செல்லும் போது யார் என்ன என்று தெரியாமல் பேசவும் தயக்கமாக இருந்தது. ரெகுலர் எனப்படும் மாணவர்கள் எங்களிடம் எப்படி பேசுவது என தயக்கம் காட்டினர். எல்லோருக்கும் பேச வேண்டும் என ஆர்வம் இருந்தாலும், எப்படி ஆரம்பிப்பது என்பதில் யாரும் பேசவே இல்லை. பின்னர் சிறிது வாரத்தில் தயக்கம் விலகி சகஜமாக பேச ஆரம்பித்தோம்.


எப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என சொல்லும் உமா சரவணன், பலே என சொல்லும்படியாக ஆடும் பாலமுருகன், அமைதியாகவே தெரிந்தாலும் தீர்க்க முடிவெடுக்கும் ஜெகதீசன், கெட்ட வார்த்தையால் திட்ட முடியாமல் டாஷ் டாஷ் என்று திட்டும் தியாகராஜன், மூக்கினால் பேசும் டீகாராமன், அஜித்குமாரை விட ரெட் படத்தின் பாட்டை கேட்ட மாயக்ருஷ்ணன், இவனுக்கு கோவமே வராதா என்று எண்ண வைத்த கதிரவன், பாடிகார்ட் முநீஸ்வரனாக இருந்த நரேந்திரன், தலுக்கு என்றவுடன் கோவம் காட்ட முடியாமல் சிரிக்கும் ராஜ்ப்ரவீன், உலக மகா சைக்கோ என்னும் குழந்தை கணேஷ், பான்ல நூலு கட்டின ரவிசங்கர், என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஷோபா, இவளிடம் எப்படி இங்கிலீஷ் பேசுவது என தெரியாமலேயே எல்லோரும் குழம்பிய சுனந்தா, எல்லாரையும் மச்சி முறை சொல்லியே அழைத்த மோன்ஸி, இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நினைக்க வைத்த பாப்பா எனப்படும் சிவசங்கரன், இன்றும் எனது உற்ற நண்பனாய் இருக்கும் பாலு, உலகத்தில் நடக்க முடியாத விஷயம் சொன்னாலும் "அப்படியா" என ஆச்சர்யப்படும் வேதப்ரியா, நீ எல்லாம் சீனியரா என்று எப்போதும் டீகாவை வம்பிழுக்கும் மோகனகுமரன், என்னை CIA ஏஜெண்டோ என்னும் அளவிற்கு சந்தேகப்படும் TR சுரேஷ் என்று பல நண்பர்கள். ஆனால் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலைமை.



அங்கு படித்த மூன்று ஆண்டுகளும் பொன்னான ஆண்டாக இருந்த்தது. இன்று பலர் பல நாடுகளில் இருகின்றனர். facebook எங்களை சில நேரம் ஒன்றிணைக்கிறது. ஆனால் பல நேரங்களில் இங்கே பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு  நான் இங்கு இருகிறேனா என்று தெரியுமா என தெரியவில்லை. அவர்களது facebook  update-ல் பர்த் டே கொண்டாட்ட படங்களை பார்க்கும்போது என்னை ஏன் கூப்பிடவில்லை என கேட்க கூச்சமாக இருக்கிறது. எங்களது வட்டம் அன்று பெரிது, இன்று சிறிதாகி விட்டது என்றே எண்ண தோன்றுகிறது.

இன்று என்னை பார்த்தால் பலருக்கு அடையாளம் தெரியுமா ? ஒல்லியாகவே பார்த்த என்னை இன்று இவ்வளவு குண்டாக பார்த்தால் என்ன சொல்வார்கள் ? எனது நண்பனை பார்த்து காலேஜ் அந்தரங்கங்கள் பேசும்போது அவன் குழந்தை மாமா என்று என்னை கூப்பிடும்போது தான் எனக்கு என் வயது யாபகத்திற்கு வருமோ ?

பொருள் தேடி ஓடும் இந்த உலகத்தில், எல்லாம் மறந்துவிடுமோ ? உனக்கு ஒன்றென்றால் நான் இருக்கேன் என்று தோள் மேல் போட்ட கைகள் இன்று என்னவாகின என்றே தெரியவில்லை. வட்டம் குறுகி குறுகி ஒரு நாள் சிறு புள்ளியாய் முடிந்துவிடுமோ ?

யாராவது ஒருவர் எல்லோரையும் ஒரு இடத்தில ஒரு நாள் பார்க்க வைக்க மாட்டார்களா ? பத்து வருடம் ஆயிற்று, இன்னும் அந்த நாள் வரவில்லை.

இந்த பாடலை கேட்கும்போது எல்லாம் திரும்பவும் அந்த காலத்திற்கு போய் விட மாட்டோமா என்று தோன்றுகிறது...


2 comments:

  1. machi ... unnoda # solluda...


    elex vijay

    ReplyDelete
    Replies

    1. Tiểu Liên nhìn thấy thần sắc của công chúa thì nhanh chóng lui xuống, công chúa thường xuyên như vậy, tựa hồ như đang đợi điều gì đó.

      Mộ Dung Hiểu Hiểu nhìn về phía không trung xa xa mà lẩm bẩm thật lâu:
      đồng tâm
      game mu
      cho thuê nhà trọ
      cho thuê phòng trọ
      nhac san cuc manh
      số điện thoại tư vấn pháp luật miễn phí
      văn phòng luật
      tổng đài tư vấn pháp luật
      dịch vụ thành lập công ty trọn gói
      http://we-cooking.com/
      chém gió
      - Ngươi thật sự không tới sao, năm năm, nhưng ta chỉ có thể chờ bốn năm, một ngày nữa, nếu ngươi là biểu ca của tiểu công tước kia thì có lẽ ngươi vì ta mà đến.

      - Chỉ là ngươi nếu như là người đó, có đấu tông thực lực thì phải trực tiếp tìm ta mới đúng chứ.

      Mộ Dung Hiểu Hiểu thở dài một hơi rồi bất đắc dĩ cười khổ.

      - Mộ Dung công chúa của ta làm sao vậy, nhìn không mấy vui vẻ đó?

      Một thanh âm mềm mại nhỏ nhẹ truyen tới, sau đó một nữ tử mỹ diệu hiện ra.

      Nữ tủ mỹ diệu này tựa như là áng mây che nguyệt, bồng bềnh như gió, từ phía xa nhìn giống như là vầng thái dương trước bình minh.

      Delete