Thursday, August 1, 2013

ஆச்சி நாடக சபா - Riverdance (Irish tap டான்ஸ்)

நமது மக்களுக்கு சினிமா என்பதை தவிர்த்து சில கலைகளும், நாடகங்களும் இருக்கின்றன என்பதை காண்பிக்கவே பதிவுகள். வெளிநாடிற்கு செல்லும்போதெல்லாம் இது போன்ற ஸ்டேஜ் ஷோ நடக்கும், அதற்க்கு கூட்டம் அலைமோதும், ஆனால் நமது நாட்டில் அந்த கூட்டங்களை எல்லாம் தியேட்டர் வரிசையில் மட்டுமே காண முடியும். இந்த பதிவுகளின் நோக்கம், சினிமா தாண்டி நிறைய அதிசயமான, ஆச்சர்யமான, நான் பார்த்த / அனுபவித்த ஸ்டேஜ் ஷோ பற்றிய பகிர்வுகள் இங்கே.......ரசியுங்கள் !

அயர்லாந்த் மக்களைத்தான் ஐரீஷ் என்பார்கள். இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் Ireland - People and Culture

இங்கு நீங்கள் பார்க்க போவது ஐரீஷ் நாட்டு கலாச்சார நடனம். கடந்த 10 வருடமாக நான் இதற்கு அடிமை. இந்த நடனத்தை நேரில் பார்க்க நிறைய செலவாகும், நான் சிங்கப்பூரில் இருந்தபோது  பார்த்தேன் என்றால் எந்த அளவிற்கு இதன் மேல் நான் பைத்தியமாக இருந்துள்ளேன் என்று பாருங்கள்.




இந்த வகை நடனத்தில் கால்களால் மட்டும் சீராக ஒலி எழுப்பி ஆடுவர். இதற்காக நிறைய பயிற்சி எடுத்து தவறே இல்லாமல் ஒரு குழுவாக ஆடுவர். இதன் சிறப்பம்சமே, பின்னணியில் வரும் அந்த துள்ளலான இசைதான். இந்த குழுவின் பெயர் "Riverdance", இவர்கள் நாடு நாடாக சென்று இதை செய்து வருகின்றனர்.





 மனதை மயக்கும் துள்ளலான இசையும், பிரமிக்க வைக்கும் நடனமும் இங்கே காணுங்கள்...




Labels : Aachi nadaga sabha, irish tap dance, suresh, kadalpayanangal, river dance

4 comments:

  1. உங்களின் ரசனையே வித்தியாசம்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! உங்கள் ரசிப்பு தன்மையை ஒப்பிடும்போது எனது ரசிப்புத்தன்மை குறைவுதான் சார் !

      Delete
  2. Replies
    1. அங்க என்ன சத்தம்.......கிருஷ்ணா என்ன ஆச்சு !

      Delete