Sunday, July 22, 2012

மறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)

 நமது ஊரில் ஒரு பழக்கம் உண்டு, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று இருக்கலாம், ஆனால் அமெரிக்கா சென்று இருந்தால் மட்டுமே நீங்கள் வெளிநாடு சென்று வந்ததாக கருதுவார்கள். நான் பல பல நாடுகள் சென்று வந்தாலும் என் அப்பா நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும்போதும் "ஏன்டா...என் பிரண்டு பையன் எல்லாம் அமெரிக்கா போறான், நீ எப்போடா போக போற ?" என்று கேட்டுகொண்டே இருப்பார், நான் இதற்காகவாவது போக வேண்டும் என்று கீழதெரு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதாக வேண்டி கொண்டேன். அவரும் அதை ஒரு பொன்னாளில் நிறைவேற்றியும் வைத்து விட்டார், பின்னர்தான் தெரிந்தது அவர் என் தொல்லை தாங்காமல் பயங்கர கடுப்புடன் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று !!!??


எனது மேனேஜர் ஒரு நல்ல நாளில் என்னை கூப்பிட்டு "நீ அமெரிக்காவுக்கு போயிருக்கியா ? சரி, சீக்கிரம் விசா அப்ளை செய்ஞ்சு கிளம்பனும் சரியா ?" என்றவுடன், எனக்கு அக்குளுக்கு கீழே சிறகு முளைத்தது மாதிரி இருந்தது. வெளியே வந்தவுடன் அப்பாக்கு போனை போட்டு "நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன்" அப்படின்னு சொல்லிட்டேன். அப்புறம் அவர் வந்து பிளைட்டு ஏத்தி விட்டுட்டு போனது எல்லாம் ஒரு தனி கதை. இப்படியாக நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு "நீ ரொம்ப நல்லவன்" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் !!! கடைசியில சிகாகோவில இறக்கி விட்டப்ப இடுப்பு எலும்பும், பட்டக்சும் ஒரு ரெண்டு இன்ச் தேய்ந்சிடுச்சு !!?
ஐஸ் ஹாக்கி விளையாட்டும் மைதானமும்
ஒரு வழியா ஹோட்டல் வந்து சேர்ந்து சாப்பிட போகலாம்னு வெளியில வந்தா எதுவுமே நடந்து போற தூரத்தில் இல்லை, இதுக்கு கார் வேற வாடகைக்கு எடுக்கணுமாம். நம்ம ஊரில் எல்லாம் வீட்டை விட்டு இறங்கினா சாயா கடையில் இருந்து சரக்கு கடை வரைக்கும் இருக்கும்....அட போங்கடான்னு ஆயிடுச்சு. இப்படியே ஒரு நாலு நாள் சாப்பிட்டு அலுத்து, கடைசியில் "ரெடி டு ஈட்" தோசை, வடை செய்ஞ்சு நாக்குல படாம சாப்பிட்டோம். மிஞ்சி போன வடையை நாங்க வெளியில கொட்டிட்டு, மறு நாள் காலையில் பார்த்தா...ஒரு எலி கெட்ட வார்த்தை சொல்லி திட்டிகிட்டே போன மாதிரி இருந்தது. சை...எல்லாம் பிரம்மைடா சீனாதானா !!
என் ருசி தீர்த்த "ரெடி டு ஈட்" உணவு வகைகள்  
அமெரிக்கா என்றால் நமக்கு வான் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் அழகு பெண்கள் தான் நினைவுக்கு வருவார்கள். கட்டிடம் பார்த்து பார்த்து அலுத்த ஒரு நாளில் "ஹூட்டர்ஸ்" உணவகம் சென்று நாங்கள் அவர்கள் கடையை சாத்தும் வரை "திணற திணற" சாபிட்டோம். வேற ஒன்னும் இல்லை அங்கே பிரெஞ்சு பிரைக்கு தொட்டுக்க வைச்ச சால்னா ரொம்ப நல்லா இருந்துச்சு....அட நம்புங்க சார்.
"Hooters" உணவகத்தில் என் ந(த)ங்கைகளுடன்
இப்படியாக என் அமெரிக்க பயணம் குண்டக்க மண்டக்க போய்ட்டு இருந்தப்ப ஒரு நாள் காலையில் வெளியில பார்த்தா ஒரே வெள்ளையா பனி மழை. இது ஒண்ணுதான் நான் விரும்பி பார்த்தது. ஆவூர் கிராமம் பக்கம் முள்ளுகாடு வெயில் மட்டும் பார்த்த என்னை இந்த பனி ஒரு பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது. ஆனால், மூன்றாம் நாளில் இருந்து கடுப்பாயிட்டேன்....வெயில் பட்டையை கிளப்பினப்ப எல்லாம் சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்குவேன், ஆனால் இங்க போட்ட சட்டையை குளிக்கிரப்ப கூட கழட்ட முடியலைடா சாமி. ஒரு காரட்டை பல்லுக்கு இடையில் வைச்சா, வாய் தந்தி அடிக்கிற வேகத்துக்கு நல்லா சலிசா நரிக்கிடுது !!!
முதன் முதலில் என் வாழ்வில் பனி பார்த்த நாள்...
அந்த நாளும் வந்தது....ஊருக்கு போறோம்ன்னுட்டு கிளம்பினேன். எங்க அப்பாவுக்கு போனை போட்டு நான் கிளம்பறேன்பா அப்படின்னு சொன்னா "என்னடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற, இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்ல" அப்படின்னு என்னை கேட்கறார் ??? :-( . அப்பாடா அப்படின்னு பிளைட்டு ஏறி சிகாகோ வந்து ஊருக்கு போற பிளைட்டுக்கு ஏறலாம்னு இருந்தப்பதான் இந்த விமான பணிப்பெண் ஒரு வார்த்தை சொன்னா, எனக்கு தலைல இடி விழுந்த மாதிரி ஆகிடுச்சு....அப்படி என்ன வார்த்தை சொன்னான்னு கேட்கறீங்களா "தாங்யூ சார், கம் அகைன் சூன்" அப்படின்னு சொல்லிட்டா சார், கம் அகைன் சூன் அப்படின்னு சொல்லிட்டா. இதுக்கு என்னை நாலு சாத்து சாத்தி, கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்.

இந்த பயணம் முடிஞ்சு நம்ம நாட்டுல கால் எடுத்து வைச்சப்பதான் இந்த பாட்டுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு புரிஞ்சது...10 comments:

 1. ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கீங்க... அமெரிக்காவில் அட்லீஸ்ட் சில வருடங்களாக இருக்கவேண்டும்.. அப்போது தான் அந்த வாழ்க்கைக்கோ / கஷ்டத்திருக்கோ பழகிக்கொள்ள முடியும். அதில் நான் இரண்டாவது வகை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க...ஏதோ ஒன்றை இழந்தது போலவே பீல் பண்ணினேன். நமக்கு நாயர் கடை சாயாவும், பானி பூரியும் வீட்டை விட்டு இறங்குனவுடனே கிடைக்கணும், ஆனால் அங்க....ரொம்ப கஷ்டமுங்க. நீங்க அங்கயா இருக்கீங்க, ஐயோ....நீங்க ரொம்ப நல்லவங்க !

   Delete
 2. ஆனாலும் இங்கு உள்ள எல்லோருக்குமே
  வாழ்வில் ஒருமுறையேனும்
  அமெரிக்க மண்ணை மிதித்துவிட வேண்டும்
  என்கிற அடங்காத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார், உங்களின் உற்சாகத்திற்கும், கருத்திற்கும்.

   Delete
 3. தமிழ் மணத்தூடாகப் புகுந்தேன் பயணம்னா பிடிக்கும் என்று இப்ப மலேசியாப் பயணம் ஏழுதுகிறேன், அது வேற விடயம்) நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி....உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்களின் "வேதாவின் வலை"படித்தேன்...மிக்க நல்ல பதிவுகள்.

   Delete
 4. சுருக்கமா இருந்தாலும் நல்லா இருந்தது,
  எந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா?

  ReplyDelete
  Replies
  1. அட இது பாகம் - 1 தான் முரளிதரன், அடுத்த பாகத்தில்தான் நான் ஞே என்று விழித்த அனுபவங்கள் நிறைய உள்ளன !! நன்றி, உங்கள் வருகைக்கும், கருத்திருக்கும்.

   Delete
 5. Suresh,

  Sollave illa!

  Very good write up & keep rocking. Sorry I don't have Tamil font in my iPhone.

  Ram, Singapore

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ராம்....நீங்க இதை படிக்றீங்க அப்படின்னு நினைக்கும்போதே எனக்கு சந்தோசம் வருது ! நீங்கதான் எதாவது குறை துவும் இருந்த சொல்லணும் !!

   Delete