Monday, July 30, 2012

ஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்

 தமிழர்களாகிய நாம் எல்லோரும் படங்களை விரும்பி பார்பவர்கள், அதிலும் அன்றிலிருந்து இன்று வரை நமது படம் பார்க்கும் அனுபவங்கள் ஏறக்குறைய ஒன்றுதான். நாம் இன்று பார்க்கும் படங்கள் எல்லாம் 2D வகையை சார்ந்தவை. நான் சிறு வயதில் என்னுடைய முதல் 3D பட அனுபவங்களை பெற்றேன் !!



"மை டியர் குட்டி சாத்தான்" படம் பார்க்கும் போது மிகுந்த பரவசமாக இருந்தேன், அதே போன்ற அனுபவம்தான் இந்த 4D படத்திற்கும் கிடைத்தது. 2D என்பது சாதாரண படம், 3D என்பது ஒரு முப்பரிமான தோற்றம் அதாவது படத்தின் காட்சிகள் உங்கள் முன் வருவது போல தோன்றும். பல பல காலமாக இதற்கு பின் வேறு டெக்னாலஜி எதுவும் வரவில்லை,இப்போது முப்பரிமான டெக்னாலஜியுடன் பீலிங் என்ற நான்காவது டெக்னாலஜியும் சேர்த்து 4D தியேட்டர் கொண்டு வந்து 
இருகிறர்கள்..



 அதாவது படத்தில் ஹீரோ கால்களுக்கு அடியில் நண்டுகள் ஊறுவது போல தெரிந்தால், உங்களின் கால்களுக்கு அடியில் நண்டு போல ஒன்று ஊறுவது போல செட் அப் செய்து விடுவார்கள். ஹீரோ கடலில் கப்பலில் போகிறாரா, உங்கள் முகத்தில் தண்ணீர் தெறிக்கும், நெருப்பில் இருக்கிறாரா உங்கள் முன் புகை தோன்றும், அவர் குதிரையில் செல்கிறாரா உங்கள் சீட்டும் குதிரை ஆடுவதற்கு ஏற்ப ஆடும். அதாவது உங்களையும் அதை பீல் செய்ய செய்வார்கள்.....தொழில்நுட்ப உதவியுடன். இந்த படங்கள் எல்லாம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே, ஆனால் வாழ்நாளில் உங்களுக்கு மறக்காது. அது எப்படி செயல்படும் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு சொல்லும்....



நான் இதை முதல் முறை சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் கண்டேன், பின்னல் பல பல நாடுகளில் இதை அனுபவித்து விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கண்டிப்பாக என்ஜாய் செய்வீர்கள்....

2 comments:

  1. டெக்னாலஜியுடன் பீலிங் என்ற நான்காவது டெக்னாலஜியும் சேர்த்து 4D தியேட்டர் கொண்டு வந்து
    இருகிறர்கள்..//
    நாங்களும் நியூயார்க்கில் கண்டு களித்தோம்.

    வீடியோ காட்சிகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி....உங்களது கருத்துக்கும், வருகைக்கும். உங்களது நியூயார்க் பயணத்தில் இந்த அனுபவம் ஒரு மறக்க முடியாததாகி இருக்குமே ??

      Delete