Monday, July 2, 2012

வெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)

இந்த ப்ளோக்கை வாசிக்கும் எல்லோருமே ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் ஆட்களாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம், அதுவும் நாம் அடுத்தவர் மேல் வைக்கும் நம்பிக்கை இன்னும் முக்கியம்...ஆனால் அந்த நம்பிக்கை எப்படி ஒருவர் மேல் ஏற்படுகிறது என்பதே இந்த பதிவின் சாராம்சம்.



பெரிய ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட போகும் நாம், MRP விலையை விட அதிகம் வாங்கும் போது எதுவும் சொல்வதில்லை, ஆனால் வீட்டுக்கு வந்து கீரை விற்கும் பெண்ணிடம் விலை அதிகம் என்று சண்டை போடுகிறோம். பொதுவாக, நமக்கு கீழே இருக்கும் நபரிடம் நாம் நமது அதிகாரத்தை நிலைநாட்ட விழைகிறோம், அதுவே அவர் சுத்தமான ஆடை அணிந்து ஆங்கிலத்தில் பேசிவிட்டால் நாம் அவரை நம்புகின்றோம். நினைத்து பாருங்கள்.....இதே கீரை விற்கும் பெண்மணி "Vegetable Services" என்று எழுதிய கண்ணை கவரும் ஆடை அணிந்து, "Do you want any Keerai madam, it is fresh and healthy and cost only 20 rupees each" என்று சொல்லும்போது உங்களுக்கு விலையை குறைத்து பேச தோன்றுமா என்ன ?




ஆகவே, எது நம்மை அந்த சாதாரணமான மனிதர்களிடம் இருந்து, அவர்களின் வலிகளை உணராமல் அவர்களை ஏமாற்றுபவர்களாக எண்ண தோன்றுகிறது ?



நினைத்து பாருங்கள், நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் பணம் போடா செல்கிறீர்கள், அங்கே அவர்கள் இடம் பகட்டாய், எல்லோரும் ஆங்கிலம் பேசுபவர்களாக, சுத்தமான ஆடை அணிந்து இருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு அவர்களது கம்பெனியை பற்றி நிறைய சந்தேகம், ஆதலால் கேள்வி கேட்கிறீர்கள், அவர்கள் சிரித்து கொண்டே பதில் சொல்கிறார்கள். உங்களுக்கு சந்தேகம்தான், ஆனாலும் நேற்று சினேகா டிவியில் வந்து நம்புங்கள்....உங்கள் பணம் இரண்டே வருடத்தில் இரட்டிப்பாகும் என்று 10 முறை கூறிவிட்டார். ஆகவே, இப்போது சொல்லுங்கள்....நீங்கள் உங்கள் பணத்தை நிச்சயம் முதலீடு செய்வீர்கள். அதுவே, உங்களது வீட்டுக்கு புதிதாக பழம் கொண்டு வந்த ஆள் சற்று கருப்பாக அழுக்காக இருப்பவர், நீங்கள் ஐநூறு ரூபாய் கொடுத்தவுடன், சில்லறை இல்லை என்று கூறி பொறுங்கள் மாற்றி கொண்டு வந்து விடுகிறேன் என்றால் நீங்கள் விடுவீர்களா !!?

இதில் எது அவரை உங்களால் நம்ப முடியாமல் தடுக்கிறது ? வெளிதோற்றம்தானே ?!!. நாம் எப்போதும் ஒருவரை வெளித்தோற்றம் கொண்டே எடை போடா பழகிவிட்டதால், உள்ளே அவர் வெகு கெட்டவராக இருந்தாலும் நல்லவராகவே நினைக்கிறோம். இப்போ சொல்லுங்கள் நீங்கள் நன்றாகத்தான் ஆடை அணிகிரீர்களா ?

அது சரி, 176000 கோடி கொள்ளையடித்த ராசாவும், நித்தியானந்தா வீடியோவே காட்டியும் நாம் அவர்களைத்தானே நம்புகிறோம் !

2 comments:

  1. Really True Words.. I never did bargain any shoppers who is doing their normal life...

    ReplyDelete
  2. Thanks Annbhu, really appreciate your comments.

    ReplyDelete