Wednesday, July 4, 2012

அறுசுவை - மதுரை உழவன் உணவகம்

 மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது கையேந்தி பவன்தான். அங்கே இரவில் எந்த நேரம் சென்றாலும் உங்களுக்கு சூடாக இட்லி முதல் பரோட்டா வரை எல்லாம் கிடைக்கும். மதுரை கலெக்டர் ஆக முன்பு இருந்த திரு.சகாயம் அவர்கள் பல புதுமைகள் செய்து இருக்கிறார், அதில் ஒன்றுதான் இந்த உழவன் உணவகம்.


சென்ற வருடம் பத்திரிக்கையில் இதை பற்றி பார்த்ததில் இருந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, அது சமீபத்தில்தான் நிறைவேறியது. இந்த உணவகம் புதிய நத்தம் ரோட்டில் அமைந்துள்ளது. பெரிய பில்டிங் என்று நினைக்காதீர்கள், ஆனால் நன்றாக உள்ளது. கப்பலோட்டிய தமிழன் வஊசி அவர்களின் பேரன்கள் மிகவும் நொடிந்த நிலைமையில் இருந்ததால், அவர்களுக்கு உதவும் பொருட்டு கலெக்டர் அவர்கள் உருவாக்கி கொடுத்ததுதான் இந்த உணவகம்.

இங்கு நமது பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே கிடைகின்றன, அதாவது நமது உடலுக்கு தீங்கு செய்யாத இயற்கை உணவுகள் மட்டுமே. அயல்நாட்டின் பீட்சாவையும் பர்கரையும் விற்பனை செய்வதற்காக குளுகுளு ஏ.சி. உணவகங்கள், சாலையோர கோபுரங்களாக உயர்ந்து நிற்கின்றன. அதேசமயம்... களி, கம்பஞ்சோறு, சோளப் பனியாரம், வல்லாரை சுடுச்சாறு, ராகி தோசை... பரம்பரைப் பரம்பரையாகத் தமிழ் மண்ணில் மணக்கும் இயற்கை உணவுகள்... இன்னும் ஃபிளாட்பார கடைகளில்தான் இருக்கின்றன.

இத்தகையக் கொடுமையை மாற்றுவதற்காகவும்... விவசாயிகள் மதிப்புக்கூட்டல் முறையில் லாபம் அடைவதற்காகவும், 'உழவன் உணவகம்' என்ற பெயரில் உழவர் சந்தையில் உணவகத்தை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது உருவாக்கினார் சகாயம். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த உழவன் உணவகம்!

 
இந்த உணவகத்தில்... தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினை சேவு, பனியாரம்... என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள்.

 இங்கு சாப்பிட்ட பிறகுதான் நாம் எவ்வளவு ஆரோகியமான உணவுகளை காலபோக்கில் விட்டு இருக்கிறோம் என்று தோன்றியது.


3 comments:

 1. Replies
  1. நன்றி நண்பரே...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.

   Delete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete