நீங்கள் ஒரு சைவ பிரியராக இருந்து எங்கு சென்றாலும் நான்-வெஜ் அயிட்டங்கள் மட்டும் கிடைக்கும் ஹோட்டல் நிறைய இருக்கின்றன என்ற ஆதங்கம் உங்களுக்கு உண்டா ? அப்படியென்றால் உங்களுக்கான ஹோடேல்தான் இந்த ராஜ்தானி உணவகம். பெங்களுருவில் பல இடங்களில் உள்ள இந்த உணவகத்தின் சிறப்பம்சமே சைவ உணவுதான். இங்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தி சைவ உணவுகள் மட்டுமே பரிமாற படுகின்றன.

சில உணவகங்களுக்கு நீங்கள் சென்றால் பல பல வருடங்களாக ஒரே மெனுதான் வைத்திருப்பார்கள், அதுவும் ஒரே சுவைதான். ஆனால் இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெனு அதுவும் அதை தயாரிக்கும் செப் மாறிக்கொண்டே இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு முறை நீங்கள் இங்கு செல்லும்போதும் வித்தியாசமாக உணர்வீர்கள். இங்கு ஒரே மெனுதான், அதாவது ஒரு புல் மீல்ஸ்தான் வேறு எதுவும் கிடையாது, ஆனால் நீங்கள் சாப்பிட ஆரம்பித்தபின் இதற்காக வருந்தமாட்டீர்கள் !! முதலில் நீங்கள் உட்கார்ந்தவுடன் உங்களின் கைகளை கழுவ சூடாக தண்ணீர் வரும் பாருங்கள், அதிலேயே நீங்கள் உங்களை ஒரு அரசராக உணர்வீர்கள்....
பின்னர் உங்கள் முன் உள்ள தட்டில் ஒவ்வொரு பதார்த்தமாக வைக்க ஆரம்பிப்பார்கள். தட்டு நிறைய நிறைய உங்களுக்கு இதை எல்லாம் சாப்பிட முடியுமா என்ற தயக்கம் இருக்கும், ஆனால் நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் ரொம்ப ஹெவியாக பீல் செய்ய மாட்டீர்கள். எல்லாமே சுத்த வெஜிடேரியன் மெனு ஆதலால் பயபடாமல் சாப்பிடலாம். அது மட்டும் இல்லாமல் நீங்கள் சாப்பிட சாப்பிட சுத்தமான மோர் வந்து கொண்டே இருக்கும் !!
சுத்தமான உணவு, அதுவும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் வித்தியாசமான மெனு, ஒரு ஆளுக்கு 271 ரூபாய் + டாக்ஸ் என்று இருக்கும்போது கண்டிப்பாக நீங்கள் என்ஜாய் செய்வீர்கள்....
இந்த ராஜ்தானி உணவகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Rajdhani. அவர்களின் உணவை இங்கே நீங்கள் காணலாம்....
rajadhani restaurants name changed to maharaj bhog #just for info
ReplyDeleteநன்றி மௌன குரு...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். கண்டிப்பாக அதை மகாராஜா போக் என அழைக்கலாம், அவ்வளவு அருமையாக இருந்தது.
Deleteஅட! அருமையா இருக்கே!!!!
ReplyDelete//
சில உணவகங்களுக்கு நீங்கள் சென்றால் பல பல வருடங்களாக ஒரே மெனுதான் வைத்திருப்பார்கள்,//
இது உண்மைதான். சரவணபவனில் ஒரு நாலுநாள் தொடர்ந்து சாப்பிட்டால் ரொம்ப போரடிச்சுருது.
இந்த வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமா?
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே. சந்தோசமாக இருக்கிறது இந்த பதிவின் மூலமாக உங்களின் மனதை தொட்டதற்கு.
Deleteஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
ReplyDelete\பெங்களூர் வருவேன்
அவசியம் அடுத்தமுறை ஒருகை பார்த்துவிடுகிறேன்
அறிமுகப் பதிவிற்கு மனமார்ந்த நன்றி
நன்றி மௌன குரு...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். கண்டிப்பாக அதை மகாராஜா போக் என அழைக்கலாம், அவ்வளவு அருமையாக இருந்தது.
Deleteமிக்க நன்றி ரமணி அவர்களே...கண்டிப்பாக நீங்கள் இந்த உணவை விரும்புவீர்கள். கண்டிப்பாக பதிவிடுங்கள் உங்கள் அனுபவங்களை.
ReplyDelete