Sunday, July 15, 2012

மறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்

எனது வாழ்வில் ஒரு சில நாடுகளுக்கு கட்டாயம் போக வேண்டும் என்று எனது உள்மனம் விரும்பும், அதில் பாரீஸ் நகரமும் ஒன்று. நான் ஓவியங்கள் வரைவேன், பல வண்ணங்கள் சேர்ந்து, ஒரு ஓவியம் உருவாகும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான். அப்படி ஒவ்வொரு கலைஞனும் போக நினைக்கும் ஒரு நகரம்தான் பாரீஸ். அங்கு ஒவ்வொரு கட்டிடமும் ஒரு அழகிய சிற்பம்.

அங்குதான் உலகப்புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் அடங்கிய லூவர் முயூசியம் உள்ளது. இங்கு உள்ள ஓவியங்களை நீங்கள் ஒரு கலைஞனாக இருந்தால் நாள் முழுதும் பார்த்து கொண்டே இருப்பீர்கள். அத்துணை அழகான ஓவியங்களும், சிற்பங்களும்.  நான் அங்கு சென்றபோதுதான் "The Da-Vinci Code" புத்தகம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டு இருந்தது, நானும் அதை படித்து இருந்ததால், நான் சுற்றிய எல்லா இடத்தையும் அதனோடு தொடர்பு படுத்தி பார்த்தது ஒரு நல்ல அனுபவம் ! கீழே உள்ள படம்தான் லூவர் முயூசியத்தின் தோற்றம்.


இங்குதான் உலகப்புகழ்பெற்ற டா வின்சி'யின் மோனலிச ஓவியமும், மைக்கேல் ஏஞ்சலோவின் வீனஸ் சிலையும் உள்ளது. அந்த  முயூசியத்தின் உள்ளே நுழைந்தது முதல் நான் மோனோலிசா ஓவியத்தை எப்போது பார்க்க போகிறேன் என்று ஏங்கி கொண்டு இருந்தேன். ஆனால் அதை பார்த்த போது, மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது மிகவும் சிறிதாக, கலர் மங்கியது போல தெரிந்தது. கீழே உள்ள படம்தான் உண்மையான மோனோலிசா ஓவியம்.


மைக்கேல் ஏஞ்சலோவின் வீனஸ் சிலை


அதன் பின்னர் நான் ஐபில் டவரை பார்க்க வேண்டும் என்று பயணப்பட்டு அங்கு சென்றடைந்தோம். இந்த டவர் அந்த காலத்தில் சீதோசன நிலையை கண்டறிவதற்காக கட்டப்பட்டது. டவரின் உச்சியில் ஒரு அறை உள்ளது, அங்கு முயூசியம் போல அன்று பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. இந்த இடத்திற்கு போக ஒரு லிப்ட் அமைத்து உள்ளனர், ஆனால் அந்த காலத்தில் ஒரு ஏணி வழியாகத்தான் செல்ல வேண்டுமாம். நாங்கள் மேலே சென்ற போது காற்று பலமாக வீசி கொண்டு இருந்தது.


பாரிஸ் நகரம், ஐபில் டவரின் மேலே இருந்து


இது ஒரு அறிய புகைப்படம், ஐபில் டவரின் மேலே இருந்து கீழே...

இந்த நகரம் நாகரீகத்தின் எடுத்துகாட்டு. திரும்பும் திசையெல்லாம் காதலர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தனர். எனக்குத்தான் வெட்கமாக இருந்தது !!

11 comments:

  1. ம் நானும் இங்கதான்யா இருக்கிறன். அருமையாக சொல்லி இருக்கிறீங்க..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி காட்டான் அவர்களே...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். உங்கள் பெயரை பார்க்கும்போது ஆளை பார்க்கும் ஆவல் எழுகிறது.

      Delete
  2. கொமொன்ஸ் போடுவதற்கு வெரிபிக்கேசன் கேட்கிறதே.. அதை சரி செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. சரி செய்துவிட்டேன்....நன்றி நண்பரே, உங்கள் உதவிக்கும் வருகைக்கும்.

      Delete
  3. உங்கள் பதிவின் மூலம்
    பாரீசின் அழகையும்
    மோனலிசா ஓவியத்தையும்
    நாங்களும் கண்டு ரசித்தோம்
    பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....மோனோலிசா ஓவியம் உங்களை கவர்ந்ததா !?

      Delete
  4. thanks i am in chennai.how to go to paris tour.how much spend a couple for 1 week .how many rupees in bank statement?

    ReplyDelete
    Replies
    1. For me I spent around 100 euros a day for food and entertainment. Since I have not stayed in Paris, I can't answer about the hotel. But the trip is expensive !

      Delete
  5. how to get overseas tour medical insurance

    ReplyDelete
    Replies
    1. Go to www.icicilombard.com and you can get the travel insurance online.

      Delete
    2. thank you very much sir.and which is good & cheap flight.ticket full payment கட்டி எடுத்து விசா apply பண்ணும் போது கொடுக்கனுமா?

      Delete