Thursday, July 26, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி

 ஒரு எழுபது வயது ஆகிவிட்டால் நாம் எல்லாம் என்ன செய்வோம் ? புத்தகம் படிப்போம், பேர குழந்தைகளுடன் விளையாடுவோம், வாக்கிங் செல்வோம்...ஆனால் ஒரு மனிதர் இந்த வயதில் தன்னை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்து மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக, பொது நலனுக்காக போராடுகிறார், அவர்தான் டிராபிக் ராமசாமி. ஆனால் இந்த மனிதருக்கு எந்த விருதும் கொடுத்ததில்லை எந்த அரசும், அட எந்த முதல்வரும், அமைச்சரும் இதுவரை இவரது முயற்சிக்கு துணை நின்றதில்லை என்றால் பாருங்களேன் !!



ஒரு மில் தொழிலாளியாக இருந்து ரிடையர்டு ஆகி, சும்மா பொழுது போகாத போது சென்னை பாரிஸ் கார்னர் டிராபிக் கண்டு ஒரு நாள் ஒழுங்கு செய்ய சென்று, அதன் பின் ஒவ்வொரு நாளும் அதை செய்து வந்துள்ளார். அதை கண்ட போக்குவரத்து காவல்துறை அவருக்கு முறையான அனுமதி அளித்து அதனால் அவர் இன்றைய "டிராபிக்" ராமசாமி ஆனார்.



ஒவ்வொரு முறையும் இவர் பெயர் பொது நலன் வழக்குகளுக்காக அடிபடும். இவரது முயற்சியால்தான் சென்னையின் யாருக்கும் அடங்காத மீன்பாடி வண்டிகள் ஒழிக்கப்பட்டன, இதற்கு பரிசாக மீனவர்களால் அவர் தாக்கப்பட்டார் ! இது போல பல பல பொது நலன் வழக்குகளை அவர் எடுத்து நடத்தி கொண்டு இருக்கிறார். இவரது தற்போதைய வெற்றிதான் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்த பெரிய கட்டடங்களுக்கு பூட்டு போட வைத்தது. இது போன்ற செயல்களால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசாங்கம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இன்றும் அவர் பின் காவலர் இருக்க போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதை காணலாம்.



இந்த வயதிலும் அவர் இது போன்ற வழக்குகளை எதிர்கொள்ள தானே லா படித்து பட்டம் பெற்றிருக்கிறார். இவரின் சேவை சென்னை போன்ற நகரத்தில் மட்டும்தான்...இன்னும் இவரை போன்ற பலர் வேண்டும் நமது தமிழகம் முழுவதும். ஒரு முறையாவது அவரை சந்தித்து இந்த மன திடம் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

6 comments:

  1. டிராபிக் ராமசாமி அவர்களைப் பற்றி செய்தித்தாள்களி்ல் படித்துள்ளேன். போலீஸ் பாதுகாப்பு அரசாங்கம் விருப்பப்பட்டோ அவருடைய பாதுகாப்பு குறித்து அஞ்சியோ கொடுக்கப்படவில்லை. நீதிமன்றம் ஆணை பிறப்பித்துத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

    நிறைய டிராபிக் ராமசாமிகள் தேவைதான் நமக்கு. ஆனால் கட்சிக்காரர்கள் போலீஸ் இவர்களின் அராஜகத்திற்கு பயந்துதான் நிறையபேர் வருவதில்லை. நான் உள்பட.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பாடுபடும் ராமசாமி ஐயா அவர்கள் நீண்டு நாள் நலமுடன் வாழ இறைவனை இறைஞ்சுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி, நீங்கள் சொல்வது சரிதான், யாரை எதிர்த்து போரடுகிறாரோ அவரே இவருக்கு உதவ வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்லதான்.....இப்போதுதான் காமராஜரை நாம் இழந்துவிட்டோமே என்று வருந்தவேண்டியிருகிறது.

      Delete
  2. //எந்த அரசும், அட எந்த முதல்வரும், அமைச்சரும் இதுவரை இவரது முயற்சிக்கு துணை நின்றதில்லை//
    அவர் போராடுவதே இவர்களை எதிர்த்துதானே.மனிதர்கள் வெட்டுபனுக்கே நிழல் தரும் மரமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேக்காளி...//மனிதர்கள் வெட்டுபனுக்கே நிழல் தரும் மரமா என்ன?// - ஆனால் இந்த மரங்கள் வெட்டுபவர்களையே அந்த நிழலில் ஓய்வெடுக்க விடுகிறதே !! இந்த அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் சிறிது மனசாட்சியோடு செயல்படாதா !!

      Delete
  3. பதிவுக்கான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. ராஜ நடராஜன்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். உங்கள் கருத்துக்களை தொடர்ந்து அளியுங்கள்.

      Delete