Thursday, July 19, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற்கை ஆர்வலர்)

இந்த "நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்" தொடர் பலரின் இதயத்தை தொட்டு, பலருக்கு இது போல் எல்லாம் ஆட்கள் இருகிறார்களா என கேள்வி கேட்க வைத்திருப்பது என்னை சந்திப்பவர்கள் கேட்கும் கேள்விகளில் தெரிகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே !! இதை படிக்கும் நீங்கள் உங்களின் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்து நம்மால் இயன்றதை செய்வோம்.



இந்த வாரம் நாம் சந்திக்க போவது திரு. யோகநாதன். இவர் ஒரு இயற்கை ஆர்வலர். இவர் கோயம்பத்தூரில் S -26 பஸ் ரூட்டிற்கு (மருதமலை - காந்திபுரம்) கண்டக்டராக வேலை செய்து கொண்டே கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மர கன்றுகளை நட்டு உள்ளார். சிறு வயதில் இவர் தன் அக்கா வீட்டிற்கு கோத்தகிரி செல்லும்போது மரத்தின் நிழலில் கவிதைகள் எழுதுவார், இதுவே அவருக்கு மரங்களின் மேல் காதல் கொள்ள வைத்தது. பின்னர் மர கடத்தல் மாபியாக்களுடன் போராட ஆரம்பித்து பல முறை இவருக்கு அடி விழுந்து இருக்கிறது.


ஒரு புறம் மரம் வெட்டுவதை தடுத்து கொண்டே, மறுபுறம் மரம் வளர்க்க பாடுபடுகிறார். இவரது 40 சதவிகித சம்பளம் மர கன்றுகளை வாங்கி நடுவதற்கே சரியாகி விடுகின்றன !!? இவர் "தாகம்" என்னும் குறும்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார், அதனால்தானோ என்னவோ இவரது அமைப்பிற்கு பெயரே "தாகம்". இவரது அமைப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...THAAGAM



இவர் பல விருதுகளை வாங்கி உள்ளார், அதை பார்க்க இங்கே சொடுக்கவும்...Awards

இவருக்கு நீங்கள் உதவ நினைத்தால் இங்கே சொடுக்கவும்...Yoganathan

4 comments:

  1. நல்ல அறிமுகம்
    காணொளியின் மூலம் அவரை
    முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். நட்சத்திர வாரம் எப்படி இருந்தது ? உங்களின் ட்ரீட் எப்போது ?

      Delete
  2. யோகநாதன் நம்ம குழுமத்துல தான் இருக்காரு...நல்ல தோஸ்த் வேற...மதுபானக்கடை படத்தில் ஒரு காவலராக நடித்து இருக்கிறார்.
    ஒருநாள் வாங்க..அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அருமை...உங்களை சந்திக்க மேலும் மேலும் ஆர்வம் அதிகமாகிறது. கோவை வர இன்னும் ஒரு காரணம் எனக்கு கிடைத்திருக்கிறது. நன்றி நண்பரே....நமது சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

      Delete