Monday, July 23, 2012

அறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை

பொதுவாக இந்த "அறுசுவை" பதிவில் நான் சுவைத்த உணவகங்களை 
பற்றித்தான் எழுதுவேன், ஆனால் இந்த முறை நான் சுவைத்த  பல விதமான பழசாறு பற்றி எழுதுகிறேன். இதை நான் எழுதவில்லை என்றால் என் ஜன்மம் சாபல்யம் அடையாது, அப்படி ஒரு சுவை இந்த பழமுதிர்சோலையில்.

நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் இந்த பழமுதிர்சோலையில் கண்டிப்பாக எதாவது ஒரு பழச்சாறு குடிக்கும் அளவுக்கு என்னை அடிமை ஆக்கிவிட்டது !! பொதுவாக நாம் ஜூஸ் என்றாலே அது சாத்துக்குடி, ஆரஞ்சு, லஸ்ஸி, மாதுளை, ஆப்பிள் என்று பழகிவிட்டோம். ஆனால் ஜூசில் இத்தனை வகைகளா என்று எண்ணும் படியாக பல விதமான வகைகளை இந்த "திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை" வழங்குகிறது.



திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு சிறிய இடத்தில இந்த பழமுதிர்ச்சோலை இருந்தாலும் சுவைக்கு ஒரு மிக பெரிய இடம். கீழே இருக்கும் ஜூஸ் பட்டியலை பாருங்கள்.....இப்படி பட்ட ஜூஸ் எல்லாம் கேள்விபட்டிருகிரீர்களா ??!!! இங்கே உள்ளது மட்டும் இல்லை, நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஜூசும் கேட்டு பெற்று கொள்ளலாம்.


நீங்கள் அடுத்த முறை திண்டுக்கல்லை கடந்து போனீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இங்கு இறங்கி சாப்பிட்டு செல்லுங்கள்.....
இல்லையென்றால் உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல ஒன்றை மிஸ் செய்கிறீர்கள்.

4 comments:

  1. திண்டுக்கல் வரும்போதெல்லாம்
    பலமுறை இந்தக் கடையைக் கடந்துபோனாலும்
    பழச்சாறு அருந்தியதில்லை
    அடுத்தமுறை அவசியம் அருந்தி மகிழ்ந்திடுவேன்
    அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், உங்களின் அனுபவங்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      உங்கள் வருகைக்கும், தொடர் கருத்திருக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. என் கணவரின் சொந்த ஊரே திண்டுக்கல் தான். இது வரை அந்த கடைக்கு நாங்கள் போனதே இல்லை. அடுத்த முறை கட்டாயம் போக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. அமுதா கிருஷ்ணன் அவர்களே....கண்டிப்பாக நீங்கள் சுவைக்க வேண்டிய ஒன்று. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி.

      Delete