Wednesday, July 25, 2012

என் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் ?!

கோவில் வாசலில் செருப்புக்கு காசு கொடுத்துவிட்டு 
செல்லும் போதெல்லாம் - இந்த கேள்வி மனதில் எழும்
எல்லோரையும் எல்லாவற்றையும் காப்பாற்றும் 
இறைவன்...என் செருப்பையும் காப்பாற்ற மாட்டாரா என்ன ? 

 

8 comments:

  1. வித்தியாசமாக யோசித்திருக்கிறீர்கள்
    என்னையும்யோசிக்க வைத்தது
    ரசிக்கும்படியான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பலம். ஒவ்வொரு முறை கோவிலில் காசு கொடுத்து விட்டு செருப்பை கழட்டி போடும்போதும் "கடவுளின் இருப்பை "உணர்ந்து கொள்ள இந்த கேள்வி என்னில் எழும்...

      Delete
  2. சமயபுரம் கோவிலுக்கு ஒருமுறை சென்றபோது,கடைக்காரர்கள் செருப்பை இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று கூவினார்கள். செருப்பு விலையோ இப்போ ரூ200. அதிலும் புதுசு. இங்கே விட்டுச் செல்வோம்னு நினைத்து எவ்வளவு காசு தரணும் என்று கேட்டால், கடைக்காரர் அர்ச்சனை தட்டு வாங்குங்க என்றார். நான் அம்பாளை தரிசித்து விட்டு விரைவில் போகலாம் என்று இருந்தேன். அர்ச்சனை தட்டு நூறு ரூபாயாம். நான் எதுவும் பேசாமல் ரொம்ப தள்ளி நிறுத்தியிருந்த என் காருக்கு சென்று செருப்பை காரிலேயே விட்டுட்டு கோவிலுக்குப் போனேன். சார் 75ரூ தாங்க, 60 தாங்க என்று இறங்கி வந்து கொண்டிருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகாதேவன், நானும் திருச்சிதான்....சமயபுரம் கோவிலில் மட்டும் அல்ல, இன்று எல்லா கோவிலிலும் இந்த நிலைமைதான். நீங்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்றால், இப்போதெல்லாம் குண்டர்கள்தான் தேங்காய் பழம் விற்கிறார்கள்....அவர்களை தாண்டி நீங்கள் சென்றால் இவன் வந்த காரியம் நடக்காது என்று காதுபட பேசுவார்கள். இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் நிம்மதியாக திரும்பி வர முடியவில்லை...நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  3. முற்போக்கு ரசனை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சங்கவி....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  4. சிரிக்க ரசிக்க வைத்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நேதாஜி, நீங்கள் ரசித்த வரிகளை பாராட்டியதற்கு !

      Delete