Thursday, July 12, 2012

ஆனந்த விகடனில் "கடல் பயணங்கள்" : நன்றி விகடன் !

இன்று எனது வாழ்நாளில் ஒரு மகிழ்ச்சியான நாள். எனது மகன் பிறந்த போது கிடைத்த அந்த உணர்வை இன்று நான் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல இன்று ஆனந்த விகடனை ஆன்லைனில் படித்து கொண்டு இருந்தேன்...அப்போது திருச்சி வலையோசை பகுதியில் என்னுடைய புகைப்படமும், ப்ளாக் செய்திகளும், சடாரென்று என்னை ஒரு ஆயிரம் தேவதைகள் வானில் தூக்கி செல்வது போல ஒரு உணர்வு.



முதன் முதலில் என்னுடைய கார்ட்டூன் ஒன்று 1999 வாக்கில் "வாவ் 2000" பகுதியில் இடம் பிடித்து அதற்கு சன்மானமாக ஒரு தொகையும் வந்தது, அதுதான் எனது முதல் பிரசுரம் விகடனில்.

இந்த நேரத்தில் என்னுடைய ப்ளாக்கை படித்து எனக்கு உற்சாகம் ஊட்டிய உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவில்லாமல் என்னால் இந்த அளவிற்கு எழுதியிருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.



எல்லோரும் ஒரு பாராட்டை எதிர்பார்கிறோம் அதுவும் நமக்கு பிடித்தவர் பாராட்டினால் இன்னும் சந்தோசம்...அதைத்தான் இன்று நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். நன்றி விகடன் !

No comments:

Post a Comment