Saturday, July 7, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபிள்ளை

படித்தால் மட்டுமே நாம் இந்த சமுகத்துக்கு ஏதாவது செய்ய முடியும் என்பதை உடைத்து காட்டியவர் இந்த மதுரை சின்னபிள்ளை. நல்ல வேளை முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் இந்த பெண்மணியின் காலில் விழுந்ததால் (என்ன இதுவே உங்களுக்கே தெரியாதா ??) இவரின் பெயர் தமிழ்நாட்டில் பலருக்கு தெரிந்திருக்கிறது, இல்லையென்றால் ஒரு மாபெரும் பெண்மணியின் சேவை உலகிற்கு தெரியாமலே சென்றிருக்கும்.



 பலருக்கு மதுரை சின்னபிள்ளை என்றால் பிரதமர் அவர் காலில் விழுந்த கதை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் அவர் ஏன் இவர் காலில் விழுந்தார், அப்படி இவர் என்ன சாதனை செய்து இருக்கிறார் என்று தெரியாது.



மதுரையில் அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் புல்லுசேரி. 1980-களில் பண்ணையார்களும் சாதி பெரியவர்களுமாக கோலோச்சிய அந்த கிராமத்தில்
பெருமாள் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த கிராமத்திற்கு
வந்தவர்தான் இந்த சின்னபிள்ளை. அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு கூலி உயர்வு, சமஉரிமை என்று போராடியவர். இவரின் திறமையையும், உதவும் உள்ளத்தை கண்டு DHAN Foundation என்னும் அமைப்பு இவருக்கு உதவ முன் வந்தது. மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் முறையை இவர் கற்று கொண்டு பொதுமக்களை சேர்த்து அவர்களின் கடன் தேவையை தீர்த்து அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற்று தந்துள்ளார். பின்னர் படிப்படியாக பக்கத்து கிராமத்திற்கும் இதை கொண்டு சென்றுள்ளார். சொல்லும்போது சிறிதாக இருக்கும் இது, ஆனால் ஒரு தனி மனுஷியாக இதை இன்று அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கற்று கொடுத்துள்ளார். இவரை வெளிநாட்டவரும் வந்து பார்த்து கற்று கொண்டு செல்கின்றனர்.

 இங்கு இருக்கும் வீடியோவை பாருங்கள், நிச்சயமாக நீங்கள் இந்த முழு வீடியோவையும் பார்க்க போவதில்லை, ஏன்னென்றால் இதில் எந்த க்ராபிக்ஸ்ம் இல்லை, ஆனால் இதில் பேசி இருக்கும் வாசிமலை என்பவர்தான் இந்த DHAN Foundation தலைவர், இவர் ஒரு IIM அகமதாபாத் ஸ்டுடென்ட் !!. நல்ல வேலைகளை விட்டு சேவை செய்ய வேண்டும் என்று இன்றும் உள்ளார். இவர் பணி திரு.சின்னபிள்ளை சேவைகளை விட பெரிது என்பது எனது எண்ணம், இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்...DHAN Foundation



இன்று "வைகை வட்டார களஞ்சியம்" எனப்படும் ஒரு பெரிய அமைப்பாக உள்ளது, அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....About Vaigai Vattara Kalanjiam

அவர் ஸ்ரீ ஷக்தி புரஸ்கார் விருது பெற்றபோது நடந்த நிகழ்வுகளை இங்கே காணலாம்....Shree Shakthi Puraskar award

No comments:

Post a Comment