Tuesday, July 17, 2012

மறக்க முடியா பயணம் - கொடைக்கானல்

சென்ற வாரத்தில் ஒரு நாள், திடீரென்று எனது நண்பன் மோகனிடமிருந்து போன். எங்கள் நண்பன் நீலகண்ட பாரதிராஜாவின் திருமணத்திற்கு நான் வருகிறேனா என்று கேட்பதற்கு. நான் சென்னையில் அவனது ரிசெப்சன் சென்று வரலாம் என்று இருந்த வேளையில், இந்த போன் ஒரு மறக்க முடியாத பயணத்திற்கு ஆரம்பமாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

ஜூன் 29, வெள்ளிகிழமை அன்று திருமணம் வத்தலகுண்டுவில் என்பதால், எல்லோரும் திண்டுகல்லில் இருந்து ஒன்றாக என் மாமனாரின் XYLO வண்டியில் சென்று, அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்லலாம் என்பது திட்டம். பாலு, டீகாராமன், மோகனகுமரன் ஆகியோரை நான் சுமார் 5 வருடங்களுக்கு முன்பு சந்தித்து, பிறகு சமயம் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

திருமணம் இனிதே முடிந்து நாங்கள் கொடைக்கானல் சென்றோம், வழியெல்லாம் எங்களை பின்னி பெடலெடுத்து கொண்டே வந்தான் மோகன். எனக்கோ இவன் சொல்வதை எல்லாம் எங்கள் டிரைவர் மாமனாரிடம் சென்று சொல்லிவிடுவாரோ என்று பயம், ஆனால் அதற்கெல்லாம் அவன் அசரவேயில்லை.  நாங்கள் ஒரு காட்டேஜ் புக் செய்து இருந்ததால், நேராக அங்கே சென்று விட்டு சிறிது நேரத்தில் மதிய உணவிற்கு புறப்பட்டோம். அது முடிந்தவுடன் தொடங்கியது எங்களின் தாண்டவம் !!!


காலேஜ் படிக்கும்போது எல்லோரும் ஒல்லியாக இருந்தோம், ஆனால் பல பல வருடங்களுக்கு பிறகு பார்க்கும்போது நான் மட்டும்தான் இரண்டு மடங்காகி இருந்தேன் !! நல்லா வெள்ளை மனசுக்காரனா இருப்பதால் சாப்பிடுவது எல்லாம் அப்படியே ஒட்டுகிறது போல ?! நாங்கள் நன்றாக மதிய உணவு உண்டு இருந்தும் போகும் இடம் எல்லாம் ஏதாவது வாங்கி கொறித்து கொண்டு இருந்தோம். ஆனால், எல்லா கடைகளிலும் ஆளுக்கு ஏற்றார் போல விலை. நான் ஒரு காபி வாங்கியபோது 10 ரூபாய் விலை, எங்கள் கார் டிரைவர் வாங்கியபோது 5 ரூபாய்தான் ! ஆகவே, நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.



பெரும்பாலும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பட படவென போட்டோ எடுத்துவிட்டு வந்து கொண்டு இருந்தோம், ஏனென்றால் எல்லா இடத்திலும் கடைகள், ஆக்கிரமிப்புகள். இயற்கையை ரசிப்பதை விட  இந்த கடைகாரர்களின் தொந்தரவுகள் ஜாஸ்தி. ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் வந்த முத்திரையை பதித்து விட்டு நைட் கச்சேரிக்கு ஆரம்பமாக ஆரம்பித்தோம். 


பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் எல்லோருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை, அதே போல் இன்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வருடங்களை பின்னோக்கி பார்த்து நாங்கள் புத்திசாலிகள் என நினைத்து எடுத்த முட்டாள்தனமான முடிவுகளை அசை போடுவதில்தான் என்ன ஒரு ஆனந்தம். காலேஜ் காலங்களில் நடந்த சம்பவங்களில் இருந்து விடை தெரியாத கேள்விகளை வீசி விளக்கம் கேட்பதும், அதை நினைவுபடுத்தி ஏன் என நாம் நம்மை கேட்பதும் ஒரு சுகமான அனுபவம். இரவுகள் நீள நீள ஒரு இனிய மனநிறைவுடன் உறங்க சென்று இருந்தோம்.


நாங்கள் சென்று இருந்த இந்த பயணம் மறக்க கூடிய ஒன்றில்லை. முடிவில் ஒரு நாள் என்பது ஒரு மணி நேரமாக போனது. மீண்டும் அடுத்த பயணத்திற்காக, அடுத்த முறை இது போல் ஒரு சந்திர்புக்காக ஏங்க ஆரம்பித்தது எனது மனது, அது அடுத்த மாதமோ இல்லை வருடமோ இல்லை மாமாங்கமோ, யார் கண்டது ?? அது வரை இந்த நினைவுகளும், இந்த பதிவுமே என்னை வாழ செய்யும்.  

8 comments:

  1. பயணங்கள் முடிவதில்லை... :)

    -வேலு

    ReplyDelete
  2. We missed u velu...it would have been nice if you had joined with us.

    ReplyDelete
  3. பழைய நண்பர்களுடன் சுற்றுலா.நினைவுகளை மீட்டுக் கொண்டாட வைப்பதுதானே. என்னொத்த நண்பர்கள் ஒவ்வாரு திசைகளில். எப்படி?......

    ReplyDelete
  4. Thanks Mr.Muruganandan, appreciate your comments. You too will get a chance soon ! :-)

    ReplyDelete
  5. எனக்கும் இது போன்ற பயணங்கள் செல்ல வேண்டும் என்று விருப்பம். வேலைப்பளு காரணமாக எங்கும் செல்ல முடியவில்லை ஆனால் என்ன செய்வது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.....விரைவில் உங்களுக்கும் இதுபோல பயணம் அமைய வாழ்த்துக்கள்.

      Delete
  6. எனக்கும் இது போன்ற பயணங்கள் செல்ல வேண்டும் என்று விருப்பம். வேலைப்பளு காரணமாக எங்கும் செல்ல முடியவில்லை ஆனால் என்ன செய்வது.

    ReplyDelete
  7. கொடைக்கானல் பார்க்க வேண்டிய இடம் நான் இது வரை 7 தடவைக்கு மேலே சென்றுள்ளேன். அங்கே குணா பாறை, வைகை டாம் வியூ பாய்ண்ட், மஞ்சளாரு டேம் வியு பாய்ண்ட், பேரிஜம் ஏரி போன்றவை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் நண்பர்களுடன் சுற்றுலா என்றாலே ஒரு வித மகிழ்ச்சி தான் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர வேண்டும் நண்பர்களே

    ReplyDelete