Sunday, August 5, 2012

மறக்க முடியா பயணம் - Genting மலேசியா

 மலேசியா என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கோலாலம்பூர் நகரமும் அந்த ரெட்டை கோபுரமும்தன், ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது இந்த ஜென்டிங் பயணம். இது மலை மேல் உள்ள ஒரு தீம் பார்க். மலை அழகையும், தீம் பார்க்கின் அற்புதமான ரைடுகளையும் கொண்டது. இங்கு போக வேண்டும் என்றால் கேபிள் கார் மூலமும், அல்லது சாலை வழியாகவும் செல்லலாம். ஆனால் நீங்கள் கேபிள் கார் மூலம் செல்லுங்கள், அற்புதமான பயணம் அது. சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் வரை தெரியும் அதில் ஒரு தனி த்ரில் இருக்கத்தான் செய்கிறது, அதுவும் கீழிருந்து மேல் செல்வதற்குள் அந்த வெப்ப மாற்றம் ஒரு நல்ல அனுபவம்.
கேபிள் கார் பயணம் - ஜென்டிங் 
மேலே மிகவும் சிறிய ஊர்தான், இங்கு மக்கள் குவிவது சூதாட !! இங்கு மட்டும் மிக பெரிய சூதாட்ட விடுதி உள்ளது, ஆகையால் பெரும்பாலும் உங்களுக்கு ரூம் கிடைப்பது குதிரை கொம்பு ! ஆனாலும் நாங்கள் முன்னமே புக் செய்து விட்டதால் நம்பிக்கை இருந்தது, ஆனால் அங்கு சென்றவுடன் பார்த்தால் எங்களுக்கு முன்னே மிக பெரிய கும்பல், அகவே சுமார் மூன்று மணி நேரம் வரை வெட்டியாக உட்கார வேண்டியதாயிற்று. ஆனால் ரூமிற்கு சென்றுவிட்டு ஒரு foot மசாஜ் செய்து கொண்டு சுற்ற கிளம்பினோம். அங்கு இண்டோர் மற்றும் அவுட்டோர் தீம் பார்க்குகள் உள்ளன, நாங்கள் முதலில் இண்டோர் தீம் பார்க் பார்க்க முடிவு செய்தோம். இந்த பார்கினுள் நமது திருவிழாவில் உள்ளது போல ரைடுகள் உள்ளன, உதாரணமாக ஜைன்ட் வீல், சிறிய படகு சவாரி, டாஷிங் கார், ரயில் பாதை சவாரிகள் என்று. பொதுவாக இங்கே மழை அதிகம் என்பதாலும், இரவினில் பனி இருக்கும் என்பதாலும் இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுவாக இங்கு நீங்கள் ஷாப்பிங் அல்லது இது போல ரைடுகள் செய்யலாம். அதுமட்டும் இல்லாமல் இங்கு பனி உலகம், மெழுகு கை, சீன மொழியில் உங்கள் பெயர், உங்களின் ஓவியம் என்று பல பல பொழுதுபோக்கும் உள்ளன.

சுமார் அதிகாலை ஒரு மணி வரை நன்றாக சுற்றிவிட்டு தூங்க சென்றோம். மறுநாள் காலை எழுந்து எங்கள் ரூம் சன்னலை திறந்தால் நல்ல காட்சி. பனி படர்ந்த மலைகளுக்கு நடுவினுள் அவுட்டோர் தீம் பார்க் தெரிந்தது. இயற்கை விரும்பிகள் நிச்சயம் ரசிக்கும் காட்சி அது. உங்களின் மேல் அந்த மேகம் முத்தமிட்டு செல்லும் அந்த தருணம் நீங்கள் ரசித்து மகிழ்வீர்கள். நான் எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சீக்கிரமாக நாங்கள் சாப்பிட்டுவிட்டு அவுட்டோர் தீம் பார்க்கிற்கு கிளம்பினோம். நீங்கள் நமது ஊரில் உள்ள தீம் பார்க்கில் என்ன பார்பீர்களோ அது எல்லாம் இங்கு இருந்தது. நன்கு சுற்றி சுற்றி ஒரு சிறு குழந்தையை போல் விளையாடினோம். இந்த பார்கினுள் இருக்கும் டைகர் டவர், டினோசர் லேன்ட் போன்ற ரைடுகள் உங்களுக்கு மிகுந்த உற்சாகம் கொடுக்கும். இது அமைதி விரும்பிகளுக்கான இடம் இல்லை, பலரும் உற்சாகமாக சுற்றுவதை நீங்கள் பார்த்தால் நீங்களும் உற்சாகமாக உணர்வீர்கள்.
நாங்கள் அங்கு இருந்த ஒவ்வொரு நொடியும் உற்சாகமாக உணர்ந்தோம். கிளம்பும்போது ஒரு வித சோகம் இருந்தது, அட நாம் சீக்கிரம் கிளம்புகிரோமே என்று. இந்த கானொளியில் நீங்கள் ஜென்டிங் ஹை-லேன்ட் பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம். நீங்களும் ஒரு முறை செல்லவேண்டிய ஒரு இடம்.


2 comments:

  1. அருமையான காணொளி
    குடும்பத்துடன் கண்டு ரசித்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படித்து மகிழ்ந்ததற்கு நன்றி...கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை செல்ல வேண்டிய ஒரு இடம்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete