Friday, July 6, 2012

ஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)


சீனாவில் இரண்டு ஷோ தான் மிகவும் பிரபலம், ஒன்று இந்த The Legend of Kung Fu மற்றொன்று chinese acrobatic ஷோ. என்னுடைய முதல் சீனா பயணத்தின் போது எங்களுடைய டீம் இந்த ஷோவை பெய்ஜிங் சென்றபோது பார்த்தோம். பல பல ஆண்டுகளாக இந்த ஷோ நடைபெறுகிறது.

கதை என்று பார்த்தால், இந்த குங்-பூ கலை எப்படி வளர்ந்தது என்பதுதான். ஆனால் அவர்கள் சொன்ன விதம்தான் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு மிக பெரிய டீம் மிகுந்த சிரத்தையோடு நடத்தி காட்டும் ஒரு நாட்டியம் போன்ற ஒரு நாடகம்.




இந்த ஷோவின் சிறப்பம்சமே ஒரு சிறுவன் குங் பூ கலையை கற்று கொள்ள ஆர்வம் காட்டுகின்றான், அவனது குரு அவனை எப்படி தயார் செய்கிறார். இதில் ஒரு கட்டத்தில் 5 பேர் கூர்மையான ஈட்டியை பிடித்து கொள்ள, ஹீரோவை அப்படியே தூக்குவார்கள், அமேசிங் காட்சி அது. இங்கே கீழே உள்ள இந்த ஷோவை பற்றிய trailer உள்ளது, பார்த்தால் உங்களுக்கே புரியும்.
இந்தியாவில் இது போல் ஒரு ஷோ நடக்கும்படியாக அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்..

No comments:

Post a Comment