Monday, July 9, 2012

ஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)

வெளிநாடுகள் சென்று பல நாட்கள் தங்கும்போது, படத்திற்கு போவதை விட எங்காவது வித்தியாசமாக ஏதாவது ஷோ நடக்கிறதா என்று விசாரிப்பேன். இப்படியாக பல வேர்ல்ட் பெஸ்ட் ஷோ பார்த்து இருக்கிறேன்....ஆனால் எப்போதுமே மனதுக்குள் ஒரு ஏக்கம் இருக்கும், ஏன் நமது இந்தியாவில் இப்படி ஒரு வித்தியாசமாக செய்வதில்லை என்று.

எப்போதுமே நமக்கு சினிமாதான் பொழுதுபோக்கு, அப்படி இல்லையென்றால் கர்நாடக சங்கீதம் அல்லது மேடை நாடகம், ஆனால் அதில் எல்லாம் ஒரு செயற்கை இருக்கும், ஒன்ற முடியாது.

அப்படி இருக்கும் போதுதான், சிங்கப்பூரில் இந்த ஷோவை பார்த்தேன், அசந்துவிட்டேன். ஒரு பக்கா ப்ரொபசனல் என்டேர்டைநிங் ஷோ. இவர்களை மங்கனியர் என்பார்கள், இவர்கள் ஒரு இனம், ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்களது இசை மனதை மயக்கும். அப்படி ஒரு இசையை ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் கொடுத்து இருக்கிறார்கள்.


ஒரு நகை பெட்டியை நிமிர்த்தி வைத்தது போல, ஒவ்வொரு சிறிய அறை, அந்த அறைகளில் ஒரு பாடகர். ஒவ்வொரு பாடல் பாடும்போதும் எந்த பாடகர் படுகிறாரோ அவரின் அறை விளக்கு எரியும். இதை சொல்வதை விட நீங்கள் பார்த்தால்தான் புரியும்...


இந்த ஷோவின் டிக்கெட் விலை சற்று அதிகம்தான் என்றாலும் நம் இந்திய பாரம்பரிய ஷோ ஒன்றை இவ்வளவு நன்றாக வடிவமைத்து இருப்பதால் கொடுக்கலாம் என்று தோன்றியது.

இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சோ...Manganiyar stage show

இது போல் ஏன் ஒரு ஷோ தமிழில் இல்லை என்ற ஏக்கம் இன்னும் இருக்கிறது...

No comments:

Post a Comment