Friday, July 27, 2012

சோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)

எனது நண்பர் ஒருவர், எனது பதிவை தினமும் படிப்பவர் இன்று என்னை கூப்பிட்டு "இளையராஜா, ரகுமான் பாடல்கள் எல்லாம் நமக்கு தெரியும்...உன்னோட பதிவில் நான் புது புது விஷயம் பார்க்கிறேன், அது போல இந்த சோலை டாக்கீஸ் பதிவிலும் என் ஏதாவது புதுமையான இசை அல்லது கேட்காத இசையை கொடுக்க கூடாது ?? நீதான் பல நாடுகளுக்கு போற இல்லை..." என்று கேட்டார். அதுவும் எனக்கு நியாயமாக பட்டது, அதனால் இந்த பதிவில் இருந்து நான் கேட்ட புதுமையான இசையையும் உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன். உங்களது கருத்தை சொல்லுங்கள் ! உங்கள் கருத்தை பொறுத்து தொடர்கிறேன் அல்லது இளையராஜா பாடல்கள் மட்டும் பதிவிடுகிறேன்.

எனக்கு கர்நாடக சங்கீத ஞானம் எல்லாம் கிடையாது, வெறும் இசையை ரசிப்பவன் நான். ஒரு நாள் திரு. MS சுப்புலக்ஷ்மி அவர்களின் இந்த "குறையொன்றும் இல்லை..." பாடலை கேட்ட போது மனது ஏதோ செய்ததை மறுக்க முடியாது. அது பாடலின் வரிகளா, அவரின் குரலா அல்லது எல்லாமுமா என்பதை சொல்ல முடியாத தெய்வீக இசை அது. நீங்களும் கேட்டு ரசியுங்கள்...


இந்த பாடலின் வரிகளை, சக்தி மசாலா விளம்பரத்தில் முதலில் பார்த்த போது பயங்கர இம்பாக்ட் இருந்தது. இந்த பாடலையும், காணொளியையும் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள்...


4 comments:

  1. சகாவரம் பெற்றது குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக்கண்ணா மலையப்பா !எனக்கு மிகவும் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனிமரம்....தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். இந்த பாடல் இசை தெரியாதோர் மனதையும் கரைக்க கூடியவை. தங்களுக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தேன் நண்பரே !

      Delete
  2. எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்
    இதை இயற்றியவர் ராஜாஜி என்பது
    குறிப்பிடத்தக்கது
    பாடலைக் கேட்டு ரசித்தோம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஐக்கிய நாடுகள் சபையில் எம்.எஸ் பாட அழைக்கப்பட்டபோது ராஜாஜி இயற்றி மெட்டு அமைத்து அரங்கேற்றம் செய்யப்பட்ட பாடல் இது. கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் தவறாமல் பாடப்படும் ஒரு பாடல்.

    ReplyDelete