Monday, July 16, 2012

ஆச்சி நாடக சபா - Philharmonic Orchestra

 நான் பொதுவாய் இசையை பாடல் வரிகளோடு கேட்டுத்தான் பழக்கம். சில பொழுதுகளில் இளையராஜாவின் பாடல் இசையை மட்டும் தூங்க போகும் முன் கேட்பதுண்டு. பல  பொழுதுகளில் இந்த இசை எப்படி உருவாகிறது என ஆச்சர்யபடுவேன்.

சிங்கப்பூரில் நான் தங்கி இருந்தபோது Philharmonic Orchestra குழுவினர் ஒரு ஞாயிறு மதியம் அன்று இசைக்க போவதாய் எனக்கு தெரிந்தது, இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று முன்னமே சென்று காத்திருந்தேன், காத்திரின்தது வீண் போக வில்லை. ஒரு இசை உருவாவதை அதுவும் ஒரு உலக புகழ்பெற்ற இசை குழுவின் இசையை அதற்கே செய்யப்பட்ட ஒரு ஆடிடோரியத்தில் கண்டேன், கேட்டேன்.


பொதுவாக AR ரகுமான், இளையராஜா போன்றவர்கள் லண்டனுக்கு சென்று ஏன் இசை அமைகிறார்கள் என்பதை இதை பார்த்தவுடன் புரிந்துகொண்டேன், அவ்வளவு துல்லியமான இசை. இதில் அந்த இசை குழுவில் ஒரு தலைவர் இருப்பார், அவரை கண்டக்டர் என்பார்கள். அவரின் கை அசைவிற்கு ஏற்ப இந்த இசை குழு செயல்படும். இப்படி உலகில் மிக சில கண்டக்டர்கள் தான் உள்ளார்கள். அவர்களில் ZUBIN MEHTA என்பவரும் ஒருவர் என்பது இந்தியர்களாகிய நமக்கு எல்லாம் பெருமை. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்....Zubin_Mehta

 நான் பார்த்த அந்த இசை நிகழ்ச்சியை வீடியோ கவரிங் செய்ய முடியவில்லை,, ஆதலால் நீங்கள் இந்த இசையும் இந்த Philharmonic Orchestra குழுவும் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக, உங்களுக்காக இந்த வீடியோ.

2 comments:

  1. கேட்டும் பார்த்தும் ரசித்தேன்
    நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருப்பது ரொம்பச் சரி
    இது ஒருபுதிய அனுபவமாக இருந்தது
    பகிர்வுக்கு நன்ரி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....இந்த வார தமிழ் மனம் நட்சத்திரம் ஆகி இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete