Tuesday, July 24, 2012

ஆச்சி நாடக சபா - Songs of the Sea (Singapore)

சிங்கப்பூரில் பொழுதுபோக்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை. சாதரணமாக நாம் நினைக்கும் ஒன்றை தொழில்நுட்பம் புகுத்தி ஆச்சர்யமான ஒன்றாக மாற்றிவிடுவார்கள். பொதுவாக கடலும் கடற்கரையும் இருந்தால் நாம் என்ன செய்வோம், பஜ்ஜி சுடுவோம் அல்லது மீன் பிடிப்போம், ஆனால் சிங்கப்பூரில் அதை ஒரு உல்லாச உலகமாக மாற்றி உள்ளனர், அதன் பெயர் "செந்தோசா தீவு ".

இங்கு எல்லா தீவிலும் உள்ளது போல கடற்கரையும், எல்லா பொழுதுபோக்கு இடத்தில உள்ளது போல பூங்காவும், ஜாய் ரைட்சும் உள்ளன. சாதாரண கடல் நீரை பம்ப் மூலம் பௌண்டைன் போல ஆக்கி அதில் லேசெர் லைட்டை ப்ராஜெக்ட் செய்து ஒரு அமேசிங் ஷோவை தருகிறார்கள், அதுதான் "Songs of the Sea". இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Songs_of_the_Sea


இந்த சோவின் கதை என்று பார்த்தால் மிக சிறியதுதான்....லீயும் அவனது தோழர்களும் ஒரு நாள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அங்கு லீ தனது காந்த குரலால் ஒரு பாடல் பாடுகிறான். அவனது பாடல் ஒரு அழகான இளவரசி தூங்குவதை காட்டுகிறது. அதை பார்த்த அவனும் அவன் நண்பர்களும் மெய் மறந்து போகின்றனர். அப்போது அங்கு வரும் ஆஸ்கார் என்னும் மஞ்சள் நிற கிளவுன் மீன் அவனை பாராட்டி அந்த இளவரசியை துயில் எழ உதவுமாறு கேட்கிறது.

அவன் தனது பாடலை பாடி அவளை துயில் எழுப்ப முயலும்போது, அங்கு நெருப்பு, ஒளி மற்றும் நீர் தேவதைகள் அங்கு வருகின்றன, அவைகளின் சக்தியை மீட்டு கொடுக்குமாறு கேட்கின்றன, லீயும் அவைகளுக்கு உதவி புரிகிறான். பின்னர் அவன் ஒரு அருமையான பாடல் பாடி அந்த இலவரசியினை துயில் எழுப்ப, அவள் இவனுக்கு நன்றி சொல்கிறாள்.

கதை என்று பார்த்தால் இது ஒன்றும் இல்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொரு பாடலின் முடிவில் கடல் நீரை பீய்ச்சி மேலே அடித்து, அதில் லேசெர் ஒளியினை அடித்து உருவத்தை கொண்டு வருவதும், வான வேடிக்கைகள், என்று ஒரு மாயாஜாலம்தான். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.


நானும் எனது மனைவியும் இந்த ஷோவை மெய் மறந்து ரசித்தோம். என்ன ஒரு டெக்னாலஜிடா என்று எங்களை வியக்க வைத்தது...

2 comments:

  1. அருமையான அழகான காட்சி விருந்தினை
    நாங்களும் கண்டு களிக்கும்படியாகப்
    பதிவாக்கிக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்....உங்களின் வருகைக்கும், கருத்துக்கும். சிங்கப்பூரின் கண்கவர் ஷோ ஒன்றை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கண்டிப்பாக பரிந்துரையுங்கள்.

      Delete