Wednesday, August 8, 2012

உலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)

 எப்படி இருக்கீங்க...எவ்வளவு நாள்தான் இப்படி நம்ம ஊர் சாப்பாடு பத்தியே எழுதுறது ? அத்தோட நம்ம பக்கத்து நாடுகளும் இந்த உலக நாடுகளும் அப்படி என்னதான் விரும்பி சாப்பிடுது அப்படின்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டாமா. இது வரைக்கும் ஜப்பான் மற்றும் பிரேசிலின் உணவுகளை பத்தி பார்த்தோம், இப்போ நம்ம சிங்கப்பூர் பத்தி பார்போம் வாங்க !! அப்புறம் இந்த பதிவில் இருந்து இப்படிப்பட்ட உலக உணவுகளை "உலகமகாசுவை"என்ற தலைப்பில் வரும், இது உங்கள் சவுகரியத்திற்காக. நீங்கள் தேடும்போது எளிதாக இருக்கும்.

ரொம்ப சின்ன தீவு, ஆனால் மிகவும் பவர்புல் கவர்ன்மென்ட். இந்த சிறிய தீவில் பொழுதுபோக்கும் உணவுகுக்கும் பஞ்சமே இல்லை, அதுவும் ரெண்டு பேர் சம்பாதித்தால்தான் வாழ முடியும் என்று இருக்கும்போது பொதுவாகவே வீட்டில் யாரும் சமைப்பதில்லை ! இந்த ஊரில் பிரபலமான உணவு என்றால் அது "சிங்கப்பூர் சில்லி கிராப் (நண்டு)", "சிங்கப்பூர் பெப்பர் கிராப் (நண்டு)"அத்தோடு "சிங்கப்பூர் ஸ்லிங் (Sling)"என்னும் ஒரு காக்டெயில்.
சிங்கப்பூர் சில்லி கிராப்

சிங்கப்பூர் ப்ளாக் பெப்பர் கிராப்
சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெயில் 
ஒரு பெரிய நண்டை எடுத்து நன்றாக வேக வைத்து, அதில் அவர்கள் தயாரிக்கும் சில்லி அல்லது பெப்பர்  குழம்பில் அமுக்கி கொடுத்தால் அதுதான் சிங்கப்பூர் ஸ்பெஷல் !! பேரை கேட்டால் மட்டும் அது ரொம்ப காரமாக இருக்குமோ என்று தோன்றும் ஆனால் நம்ம ஊர் காரத்திற்கு ஒப்பிட்டால் இது பச்சா மாமு. ஆனால் இதை உடைத்து சாப்பிட ஆரம்பித்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......ரொம்ப டேஸ்ட். அதுவும் அவர்கள் ஒரு  பன் தருவார்கள், அதை இந்த சில்லி அல்லது பெப்பெரில் முக்கி சாபிட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

அது மட்டும் இல்லை, இதை சாப்பிடும்போது உங்களின் தாக சாந்திக்காக "சிங்கப்பூர் ஸ்லிங்"என்னும் காக்டெயில் (ஜூஸ் மற்றும் ஆல்கஹால் கலவை) ஒன்றும் இருந்துவிட்டால் அதுதான் அன்று சொர்க்கம். இந்த சிங்கப்பூர் ஸ்லிங்கில் என்ன இருக்குதுன்னா...
  •  1/2 அவுன்ஸ் ஜின் 
  • 3 அவுன்ஸ் பைனாபிள் ஜூஸ் 
  • 1/4 அவுன்ஸ் எலுமிச்சை ஜூஸ் 
  • 1/2 அவுன்ஸ் செர்ரி பிராந்தி 
  • 1/4 அவுன்ஸ் Cointreau
  • 1/4 அவுன்ஸ் Benedictine
  • மற்றும் சில....
இந்த காணொளியில் சிங்கப்பூரின் சில்லி கிராப் எப்படி செய்வது என்பதை காணலாம்....மற்றவைகளை பாகம் - 2ல் பார்போம்.

2 comments:

  1. படங்களை பார்க்கவே நாவூருகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர்...கண்டிப்பாக நீங்க சுவைக்க வேண்டிய உணவுதான் இது.

      Delete