Sunday, August 12, 2012

மறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )

என்ன சௌக்கியமா ? போன அமெரிக்க பயணம் பதிவை நிறைய பேர் ரசிச்சி, படிச்சி கமெண்ட்ஸ் போட்டு இருந்தீங்க, ரொம்ப நன்றி. இதோ என்னோட பாகம் - 2 . போன தடவை, சும்மா போய்ட்டு திரும்ப வந்திருங்க அத்தான் அப்படின்னு அனுப்பின ஏர் ஹோஸ்டஸ் சொன்ன வாக்கு இவ்வளவு சீக்கிரம் பலிக்குமினு நான் நினைக்கலை. என்னோட பாஸ் வந்து உனக்குதான் அமெரிக்கா இப்போ பழக்கம் ஆகிடுச்சே (????!!!!!), அப்படியே இன்னொரு ட்ரிப் போயிட்டு வந்திடேன்னு என்கிட்டே சொன்னப்ப "சூனா பானா, அப்படியே எஸ்கேப் அகிடுடா" அப்படின்னுமனசுக்குள்ள ஒரு குரல்
வந்திச்சு, ஆனாலும் அத்தான் வந்திருங்க அப்படின்னு சொன்ன அந்த  ஏர் ஹோஸ்டஸ் மனசுக்குள்ள வந்ததால ஓகே பாஸ் அப்படின்னு என்னமோ கள்ள கடத்தல் கூட்டத்து தலைவர்கிட்ட சொன்னது மாதிரி சொன்னேனாம்.
Millenium park - Chicago

இந்த தடவை கண்டிப்பாக சிகாகோ பொய் சுத்தி பார்க்கிறோம் அப்படின்னு முடிவு பண்ணிதான் போனோம். இந்த தடவை அங்கே போனதில இருந்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்....அட நிசமாதாங்க சொல்றேன். அந்த ஊரில ஸ்டாடிக் கரண்ட் அப்படின்னு ஒன்னு உருவாகும். அதாவது, காத்து ரொம்ப டிரையாக வீசுவதால் உங்களின் துணியில் அந்த கரண்ட் உருவாகும், அப்புறம் அது உங்களின் உடம்பில் இருக்கும். நீங்க எங்க போய் இரும்ப தொட்டாலும் அப்படியே ஷாக்காயிடுவீங்க !! காலையில் இருந்து ராத்திரி வரை எனக்கு ஷாக் அடிசிகிட்டே இருக்கும். கார் கதவை திறந்தா, எந்த டோர் திறந்தாலும், அட கிட்ட வாங்க....ஒன்னுக்கு போக பாத்ரூம் கதவில கையை வைச்சாலும் கூட அடிக்கும் பாருங்க, சை என்ன ஊருடா இது அப்படின்னு ஆகிடும்.

From the top of the Sears tower
அந்த ஊரில (Peoria , IL ) நம்ம ஊரில பேய் காத்து அப்படின்னு சொல்றோமில்லையா அது போல சுழல் காத்து உருவாகும். அப்போ வீடு எல்லாம் (அங்க எல்லாம் மரத்தில கட்டின வீடுதான்) பிச்சிக்கோ அப்படின்னு போயிடும். ஒரு சுழல் காத்து உருவாகும்போது அந்த ஊரில ஒரு சங்கு ஊதுவாங்க, உடனே நீங்க வீட்டோட பேஸ்மென்ட் போய் ஒளிஞ்சிகனும், அந்த காத்து போனவுடனே திருன்பவும் அந்த சங்கு
சதம் ஒலிக்கும், அப்போதான்நீங்க வெளியே வரணும். உங்களுக்கு அதிர்ஷ்டம்இருந்தா, உங்களோட
வீடு இருக்கும் இல்லேன்னா நீங்க மட்டும் இருப்பீங்க. ஒரு நாள் நான் மட்டும் தனியா வீட்டுல இருந்தேன், நம்ம தலைவர் படத்தை போட்டு பார்த்துகிட்டு இருந்தேன். திடீர்ன்னு நம்ம பக்கத்துக்கு
வீட்டுல இருந்து பிரெண்ட்ஸ் எல்லாம் ஓடி வந்து எப்படி இருக்க அப்படின்னுவிசாரிக்க, நான்
அவங்களை குழப்பமா பார்த்தேன். அவனுங்க எல்லாம் சும்மா ஒரு மணி நேரம் வரை பேஸ்மெண்டில் இருந்து உயிரை கையில புடிச்சிக்கிட்டு இருக்க, நானோ இங்க தலைவர் படம் பார்த்துகிட்டு அவனுங்க சும்மா காண்டாகிட்டானுங்க, ஜன்னலை திறந்து காண்பிசானுங்க, அங்க அங்க
வீடு எல்லாம் கொத்து கொத்தா பிச்சிக்கிட்டு போய் இருந்திருக்கு, ஆனா நம்ம தலைவர் என்னை காப்பாத்திட்டார், அவரு சுழன்று சுழன்று அடிச்சதுல நம்ம சூறாவளியே தள்ளி போய்டுச்சு.

With the Sears tower
அப்புறம் நாங்க ஒரு நாள் சிகாகோ போய் இருந்தோம். அங்க இருந்த மில்லேனியும் பார்க், சியர்ஸ் டவர்ஸ், லின்கன் பார்க், டௌன்டவுன் அப்படின்னு சுத்தி பார்த்தோம். நம்ம ஊரில எல்லாம், எவன் எப்படி போனா நமக்கு என்ன அப்படின்னு தெருவில பார்க் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்போம், ஆனா இங்க பார்கிங் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200 ரூபாய் வரை இருந்தும், எவனும் தெருவில பார்க் பண்ணலை !! ரொம்ப நல்லவைங்களா இருபங்க போல !! முடிவா அங்க இருந்து கிளம்பிட்டேன், நல்ல வேளை இந்த தடவை அங்க இருந்து யாரும் என்னை திரும்பவும் வாங்க அப்படின்னு கூப்பிடலை, ஆனாலும் அடுத்த ட்ரிப் போய் இருந்தேன். அப்போ நியூயார்க், வாஷிங்டன் போய் இருந்தேன், அது அடுத்த பதிவில்.

In front of the Lincoln park zoo

சிகாகோ போகிறவர்கள் இந்த வீடியோவையும், டிப்ஸையும் படித்து பார்த்து கொள்ளுங்கள்...

பார்க்க வேண்டிய இடங்கள் : மில்லேனியும் பார்க், சியர்ஸ் டவர்ஸ், லின்கன் பார்க், டௌன்டவுன்
செய்ய கூடாதவை : கருப்பர்களை பார்த்து நீங்கள் "ப்ளாக்" என்று சொல்லுவது, ராத்திரியில் தனியாக ஊருக்கு வெளியே செல்வது, டூர் பஸ் புக் செய்வது
பஞ்ச் : எந்த ஸ்டேஷன்னில் இறங்கினாலும் உங்களுக்கு டூரிஸ்ட்
மேப் கிடைக்கும், டூரிஸ்ட் பாஸ் என்று எல்லா ஒன்று வாங்கி கொண்டால்
எதில் வேண்டும் பயணிக்கலாம்.  

2 comments:

 1. அருமையான காணொளி
  பல அறியாத தகவல்களை தங்கள்
  பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்...தங்கள் தொடர் உற்சாகத்திற்கு மிக்க நன்றி. உங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சியளிகிறது.

   Delete