Monday, August 13, 2012

ஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்

 ஒரு முறை ஒரு சுயமுன்னேற்ற வகுப்பு ஒன்றில் எல்லோரிடமும் நீங்கள் அடுத்த பிறவியில் எதாவது ஒரு மிருகமாக பிறக்க வேண்டும் என்றால், நீங்கள் எந்த மிருகத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார் எங்களுக்கு கிளாஸ் எடுத்தவர். எல்லோரும் சிங்கம், புலி, குதிரை, நாய் என்று சொல்லிக்கொண்டு வந்த போது, நான் மட்டும் "டைனோசார்" என்று சொன்னவுடன் அங்கு இருந்த எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். அவர் ஏன் நான் அந்த மிருகத்தை தேர்ந்தெடுத்தேன் என்ற போது நான் "இவர்கள் சொன்ன எல்லா மிருகமும் ஏதாவது ஒரு தரப்பு மக்களுக்கு பிடிக்காமல் இருக்கும்....ஆனால், இந்த  டைனோசார் விலங்கை மட்டும் எல்லா மக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள், அதற்க்கு இந்த Jurassic Park படமே சாட்சி" என்றேன், அதை அங்கு இருந்த எல்லோருமே ஆமோதித்தனர். யோசித்து பாருங்கள், எல்லோரிடத்திலும் இந்த ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது...அந்த டைனோசார் மட்டும் இன்று இருந்தால் நாம் அதைத்தான் பார்க்க விரும்பி இருப்போம். அப்படி அந்த டைனோசார் விலங்கை தத்ரூபமாக நம் கண் முன்னால் காண்பித்தால் ?? அப்படி ஒரு ஷோ நான் பார்த்தேன்....அதுதான் "வாக்கிங் வித் தி டைனோசார்"
சிங்கப்பூரின் எக்ஸ்போ ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற போகிறது என்று விளம்பரங்கள் வரும்போது அட என்ன இது, என்று எண்ண தோன்றியது, ஆனால் ஒரு பெரிய ஆர்வம் எதுவும் எழவில்லை. 
காரணம் அது எப்படி 10  ஆள் உயரம் உள்ள டைனோசார் நம் கண் முன்னே 
வரும், ஒரு சிறிய உருவத்தை வைத்து நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று 
நினைத்தேன், ஆனால் ஒரு ஞாயிறு அன்று எதுவும் பொழுது போகவில்லை 
என்ற போது சரி போய்தான் பார்ப்போமே என்று போனேன்......ஆனால் 
நிஜமாகவே மிஸ் செய்ய கூடாத ஒரு ஷோ என்று பார்த்த பின்தான் புரிந்தது. இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும்...
முதலில் ஒரு 10 ஆள் உயரம் கொண்ட டைனோசார் உருவம் நம்மை நோக்கி வந்து தனது கழுத்தை நம் பக்கம் நீட்டி நாம் தொட்டு பார்த்து சிலிர்க்கும்போதே ஆரம்பித்து விடுகிறது அந்த ஷோவின் சக்சஸ் ! நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தத்ரூபம், சத்தம், நடை என்று அந்த டைனோசார் 
உங்களை அசத்தும். அந்த மேடையில் ஒரு ஆள் அந்த டைனோசார் வகையின் பெயர், அதன் குணம் என்று சுவாரசியமாக சொல்ல சொல்ல பின்னால் அந்த டைனோசார் ஒரு குட்டி கதையை நடத்தி காட்டும். உதாரணமாக, ஒரு டைனோசார் தன குட்டியை எப்படி காப்பதும் என்று சொல்ல சொல்ல 
பின்னால் அந்த டைனோசார் குட்டியை காப்பாற்ற நடத்தும் போராட்டமும், மூர்கமும் நடக்கும்.  இந்த ஷோவின் வெற்றியே அவர்கள் உங்கள் முன் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அந்த டைனோசார் மிருகத்தை அப்படியே அதே உயரம், நிறம், உடல்மொழி, சத்தம் என்று கொண்டு வருவதுதான். இதை எப்படி அவர்கள் செய்கிறார்கள் என்பதை நீங்கள் இந்த கானொளியில் காணலாம்...
நீங்கள் இதை ரசித்திருபீர்கள் என்று நம்புகிறேன்...உங்களது கருத்துக்களை மறக்காமல் இங்கே பதிவிடுங்கள்.

2 comments:

  1. உடனே தொட்டு பார்க்கவேண்டும் என ஆவலாய் உள்ளது .....

    அண்ணா அப்பறம் டிக்கெட் விலை எவ்ளோனு சொல்லவே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த்....டிக்கெட் சுமார் 48 வெள்ளி இருந்ததாக ஞாபகம். சிங்கப்பூரில் திரும்பவும் இந்த வருடம் இந்த ஷோ வர போவதாக கேள்விபட்டேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete