Thursday, August 16, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்ணன் (சோசியல் ஆக்டிவிஸ்ட்)

இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் எல்லாம் நமது வாழ்வில் நாம் அறிந்திராத ஹீரோக்களை உங்களுக்கு அறிமுகபடுத்தும் நோக்கம் ஒன்றே. இன்றைய உலகில் ஒரு 10 ரூபாய் பொருள் கொடுத்தாலும் அதை 100 ரூபாய்க்கு விளம்பரபடுத்தி நம்மை அவர்கள்தான் ஹீரோ என்று எண்ண வைக்கும் உலகம். அப்படிப்பட்ட இந்த உலகத்தில், இப்படியும் சிலர் இருகிறார்கள் என்று உங்களுக்கு அறிமுகபடுத்தும் ஒரு சிறிய முயற்சி, அவ்வளவே. இதை உங்களால் முடிந்தவரை பரப்புங்கள்.

சுனிதா கிருஷ்ணன், எவ்வளவு பேருக்கு இவரை தெரியும் ? இவர் பெண் கடத்தல்கள், பெண் விபச்சாரம்  / விபச்சாரிகள் ஆகியவற்றை எதிர்த்து போராடும் ஒரு மன உறுதி மிகுந்த பெண். இவர் சொல்லும் தகவல்களை எல்லாம் கேட்டால் நமக்கு இடையிலேயே கொடிய மிருகங்கள் வாழ்கின்றனவோ என்ற ஐயம் எழும். இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் ......Sunitha_Krishnan

இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தாலும் அதை எதிர்த்து தன் வாழ்வையே பணயம் வைத்து இதை செய்கிறார். இவர் மீட்ட பெண்களை காத்து, அவர்களுக்கு மாற்று வாழ்வை அளிக்கிறார். இதற்காக "PRAJWALA"என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். அவர் கேட்கும் கேள்வி "நீங்கள் உங்களின் வீட்டு வேலைக்கு கூட ஒரு திருந்திய விபச்சாரியை வைக்க மனமில்லை எனில், நீங்கள் அவர்களை பார்த்து பரிதாப படுவதில் அர்த்தமில்லை. அவர்களுக்கு வேண்டியது உங்களின் கருணை அல்ல....ஒரு வாழ்க்கை" என்னும் போது, யாரோ என்னை கன்னத்தில் அறைந்தது போல பட்டது. இவரின் prajawala அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Prajwala.



இவர் TED அமைப்பிற்காக மைசூர் இன்போசிஸ்சில் ஆற்றிய "பெண் அடிமை விபச்சாரம்"எதிர்ப்பு முழக்கம் காலத்தால் அழியாத ஒன்று. அதை காண இந்த காணொளியை சொடுக்கவும். இந்த காணொளி உங்களின் மனதை பாதிக்கலாம்...ஆகவே கவனம்.


No comments:

Post a Comment