Saturday, August 18, 2012

என்னை தூங்க விடாத கேள்வி

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சில கேள்விகள் உங்களை சிரிக்க, 
கோவப்பட, அழ, வெறுக்க, ஆசைப்பட, மோகபட, பைதியமக்க வைக்கும். 
ஆனால், வெகு சில கேள்விகளே உங்களை சிந்திக்க வைக்கும். சில கேள்விகள் உங்களை சிந்திக்க வைப்பதாய் இருந்தாலும்  குழப்பி விடும், உதாரணமாக "பணம் மட்டுமே வாழ்க்கையாக முடியுமா ?" இதற்க்கு ஆம், இல்லை என்ற பதில் இருந்தாலும் உங்களால் அந்த கேள்வியை முழுமையை உணர்ந்தால் மட்டுமே சிந்திக்க முடியும், அதுவும் குழப்பம் இல்லாமல் ! ஆனால், நேற்று ஒரு கானொளியில் நான் கேட்ட, பார்த்த அந்த கேள்வி என்னை உலுக்கியது என்றால் அது மிகை ஆகாது.
ஒரு சிறுமி, அவளுக்கு பேச முடியாது. ஒரு நாள் அவள் ஒரு ஊமை பிச்சைகாரனின் வயலின் இசை கேட்கிறாள். அவள் அவனிடம் சென்று தனக்கு அதை கற்று தருமாறு கேட்கிறாள். அவள் அதை கற்க ஆரம்பிக்கிறாள், அவள் வயலினை எடுத்து கொண்டு பள்ளியில் மாலை வேளையில் பயிற்சி செய்யும்போது ஒரு பணக்கார சிறுமியின் கோவத்திற்கு ஆளாகிறாள். அந்த பணக்கார சிறுமி பியானோ நன்றாக வாசிப்பாள், ஆனால் இவளின் வயோலின் இசை அவளை பொறமை கொள்ள வைக்கிறது. ஒரு நாள் அந்த பள்ளியில் இசை போட்டி வருகிறது. இந்த பணக்கார சிறுமி அந்த ஊமை சிறுமி வாசித்தால் தனக்கு பரிசு கிடைக்காமல் பொய் விடும் என்று ஒரு ரவுடி கும்பலை கொண்டு அவளின் வயொலினை உடைத்து போடுகிறாள். அப்போது அந்த ஊமை சிறுமி அந்த பிச்சைகாரனிடம் சென்று "நான் மட்டும் ஏன் எல்லோரையும் போல் இல்லாமல் இப்படி இருக்கிறேன் ?" என்று கேட்க அந்த பிச்சைகாரன் "நீ ஏன் அவர்களை போல் இருக்க வேண்டும் ?" என்று கேட்கிறார். பின்னர் அந்த பெண் உடைந்த வயொலினை ஒட்டு போட்டு கொண்டு சென்று போட்டியில் ஜெயிக்கிறாள். இந்த கதையில் கேட்கப்பட்ட "நீ ஏன் அவர்களை போல் இருக்க வேண்டும் ?" என்ற கேள்வி உங்களை உலுக்கவில்லை ??!

நினைத்து பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை பார்த்து அவர்களை போலத்தான் இருக்க ஆசை படுகிறோம். சிறு வயதில்
என் நண்பனாக கோபி என்று ஒருவன் இருந்தான், அவன் பல நாடுகளின் ஸ்டாம்ப் வைத்து இருப்பான். அவனது தந்தை எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்வதால் அவனுக்கு நிறைய ஸ்டாம்ப் கிடைக்கும். அவனை பார்த்து என் தந்தையிடமிருந்து நானும் ஸ்டாம்ப் சேர்க்க வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சேர்த்தேன். ஆனால், சில மாதம்தான் 
அதை செய்ய முடிந்தது, பின்னர் எனது நண்பன் அசோக் விளையாடும்
பம்பரம் என்னை ஈர்க்க ஆரம்பித்தது இப்படியாக நான் சிறு வயதில் 
எனக்கு பிடித்த ஓவியம் வரைதல், ஊர் சுற்றுவது என்று செய்யாமல்...
ஒவ்வொரு பொழுதும் நான் மற்றவர்களை போல வாழத்தான் முயற்சி 
செய்திருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் நாம் இந்த சமூகம் நம்மை கேலி செய்ய கூடாதே என்று நம்மை சுருக்கி கொள்கிறோம். எனக்கு மழையில் நனைந்து கொண்டு போவது பிடிக்கும், ஆனால் ஒரு முறை நான் நனையும்போது மழைக்கு ஒதுங்கியவர்கள் என்னை பார்த்த பார்வை எதோ நான் தவறு செய்வது போல பட்டது. நான் பிளைட்டில் செல்லும் போதெல்லாம் செருப்பு போட்டு கொண்டு போக வேண்டும் என்று விரும்புவேன், ஆனால்
என் கூட வரும் நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். செருப்பு எனக்கு சௌகரியம் என்றாலும் இந்த ஊர் பிளைட்டில் செல்லும் நபருக்கு என்று ஒரு விதமான உருவகம் கொடுத்து இருக்கிறது. உடனே நீங்கள் என்னதான் எனக்கு புத்திமதி சொன்னாலும், சற்று உங்களை, உங்கள் செயல்களை நினைத்து பாருங்கள். நாம் எல்லோரும் ஒரு வகையில் இந்த சமூகம் வகுத்து உள்ள எழுதபடாத விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். இப்போது இந்த கேள்வியை யோசித்து பாருங்கள் "நாம் என் எல்லோரையும் போல் இருக்க வேண்டும் ?"....வாருங்கள் நமக்கு கிடைத்த
இந்த வாழ்கையை நமது எண்ணம் போல், ஆனால் ஒழுக்கமாக,
சந்தோசமாக வாழ்வோம்.

11 comments:

  1. ஒழுக்கமாக... சரியான வார்த்தை.. அருமையா சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவி...நீங்கள் என் ப்லோகை தொடர்வது கண்டு மகிழ்ந்தேன். உங்கள் உற்சாகம் ஓடும் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி.

      Delete
  2. என்ன செய்வது ... என்னுடைய வாழ்கையை நான் வாழ்வதற்கான சூழ்நிலை இங்கில்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த்...அந்த சூழல் வரும் வரை நீங்கள் காத்திருக்க போகிறீர்களா, இல்லை உருவாக்கி கொள்ள போகிறீர்கள ? தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. அருமையான பதிவு
    வாழுவது சில காலம்
    அதனையும் சந்தோஷமாக வாழாமல்
    பிறருக்காக ஏன் அதை இழக்கவேண்டும்
    அனைவரும் அவசியம் மனதில் கொள்ளவேண்டிய
    அருமையான விஷயத்தை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்...உங்களின் "முடிவின் விளிம்பில்" வரும் //இருக்கிறேன் என்பது சரியா?அல்லது கிடக்கிறேன் என்பது சரியா? அல்லது இறக்கிறேன் என்பதுதான் சரியா? // என்னும் வரிகள் இந்த பதிவோடு ஒத்து போவதை உணர்கிறேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. Replies
    1. நன்றி கிருஷ்...உங்களின் பாராட்டுகள் என்னை மீண்டும் எழுத தூண்டுகிறது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. thangalin padhivu arivoppoorvamaanadhu vaazhththukkal nandri
    surendran

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேந்திரன்...உங்கள் பாராட்டுக்கள்தான் எனக்கு இது போல் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கிறது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. சிந்திக்க வைக்கிறது... இதே போல் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete