Sunday, August 19, 2012

மறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா

சென்னையில் வாழும் பலருக்கு இந்த இடம் தெரியுமா என்பதே எனக்கு சந்தேகம் !! ஆனால், நாம் கண்டிப்பாக போக வேண்டிய இடம். சென்னை ECR ரோட்டில் பைக் பயணம் செய்ய விரும்புபவன் நான்...அதுவும் நான் என்னுடைய புது பைக் வாங்கிய சமயம் எல்லாம் எப்போதும் ECR ரோட்டில் சனிக்கிழமைகளில் தனியாக காற்று வாங்க போவேன், அப்படி செல்லும் போது என்னை ஈர்த்த இடம்தான் இது. வெளியிலிருந்து பார்க்கும் போது இது என்ன இடம் என்பதே தெரியாமல் இருக்கும், ஆனால் உள்ளே நுழைந்தால் ஒரு அரமையான, மனம் ஈர்க்கும் நமது பாரம்பரியம் நிறைந்த இடம். தக்ஷின் என்றால் தெற்கு என்று அர்த்தம், சித்ரா என்றால் கூடம் என்று அர்த்தம், இங்கே நீங்கள் நமது பாரம்பரிய வீடுகள், கலைகள், பொருட்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இதை நமது அரசு முயுசியம் போல அலுத்து வடியும் இடம் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம், உற்சாகம் கொப்பளிக்கும் இடமாகும்.

Chettinadu house displays
டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தவுடன் உங்களை ஈர்ப்பது ஒரு 
பசுஞ்சோலை மரங்களும், சில்லென்ற கடல் காற்றும். ஒரு சின்ன 
டாகுமெண்டரி போட்டு காண்பிப்பார்கள், அதில் நமது கலாச்சாரம் பற்றிய 
சிறு தொகுப்பு. அது முடிந்தவுடன், நீங்கள் சிறு சிறு வீடுகள் போல இருக்கும் இடங்களுக்கு சென்றால் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபளிக்கும். நமது செட்டிநாடு வீடுகளுக்கு சென்றால் சிறிய முற்றம், வீட்டின் வெளியில் 
கோலம், உள்ளே ஒவ்வொரு அறைகளும் விசாலமாக என்று பார்பதற்க்கே 
அருமையாகஇருக்கும். இப்படியாக குயவர் வீடு, விவசாயி
வீடு, அக்ரஹாரா வீடுகள் என்று தமிழ்நாட்டு கலாச்சாரம் பிரதிபலிக்கும்.
கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா வீடுகள் பலவும் கூட இங்கு 
இருக்கின்றன. 

ஒவ்வொரு வார சனி, ஞாயிறு கிழமைகளில் நமது பாரம்பரிய கலைகள் நடைபெறும். நான் சென்று இருந்த போது கர்நாடக கலைகள் நடைபெற்றன. நீங்கள் கிளி ஜோசியம், கிராமத்து சினிமா, பறவை 
கூத்து, கோலம் போடுதல், பஞ்சு மிட்டாய், பம்பரம் விடுதல் என்று பல விதமான
விஷயங்கள் இருக்கின்றன நீங்கள் செய்து பார்பதற்கு. நாங்கள் ஒரு 
குழந்தையை போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அந்த வீட்டிலிருக்கும் 
மனிதர்கள் போல பேசி பழக என்று செய்தது ஒரு நிறைவான அனுபவம். 

ஜக்கம்மா ஒரு சீட்டு எடு...

Harry POTTER in the making...

சினிமா DTS சவுண்ட்

பம்பரம்......நம்ம பம்பரம்  


எப்போதும் ஹோட்டல், பீச் என்று செல்பவர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். தக்ஷின் சித்ராவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Dakshina Chitra

6 comments:

  1. மாதமொருமுறை சென்னைப்பக்கம் போனால் கூட
    இதுவரை நான் தட்ஷிண சித்திராவை அறிந்திருக்கவில்லை
    நிச்சயமாக பார்க்கவேண்டிய இடம் என்பதில்
    எள்ளளவும் சந்தேகமில்லை
    அடுத்த முறை அவசியம் பார்த்துவிடுவேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்...தங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாகம் கொடுகிறது. உங்களை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி.

      Delete
  2. அருமையான இடம்.

    ரெண்டு முறை போய் வந்தேன்.

    ஒரு அனுபவம் இங்கே

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/06/2009-37.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...உங்கள் பதிவை படித்தேன், மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

      Delete
  3. உண்மையிலேயே அந்தக் காலத்துக்கே போய் வந்துவிடலாம். நிறையப் பேருக்குத் தெரிந்த இடம்தான். பள்ளியில் சுற்றுலா அழைத்துப் போகிறார்களே.
    பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லிசிம்ஹன்...தங்கள் கருத்துக்கும், வருகைக்கும். நிறைய பேருக்கு தெரிந்த இடம் என்பதே எனக்கு சந்தோசம். அங்கு நாங்கள் இருந்த நேரம் எல்லாம் நமது பாரம்பரியம் கண்களில் தெரிந்தது.

      Delete