Thursday, August 2, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான்சிஸ்

 இவரை தெரியுமா உங்களுக்கு ? இந்த வாரம் இவரை பற்றிதான் பேச்சாய் இருக்கிறது !! இவரை தெரிந்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்கு "மகசேசே விருது" பற்றி தெரியுமா....இது ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னால் குடியரசு தலைவர் ரமோன் மகசேசே அவர்களின் நினைவாக வழங்கப்படும் பரிசு இது. நமது தமிழ்நாட்டில் உள்ள "குழந்தை பிரான்சிஸ்"க்கு இந்த வருடம் அது கிடைத்திருக்கிறது. இந்த அவார்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் Ramon_Magsaysay_Award.


இந்த குழந்தை பிரான்சிஸ் என்பவர் நமது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 1979ம் ஆண்டு முதல் "ஒருங்கிணைந்த ஊரக முன்னேற்ற அமைப்பு" (IVDP - Integrated Village Development Programme) என்ற ஒன்றை ஆரம்பித்து மக்களுடன், மக்களை கொண்டு இரவு பாடசாலை, மருந்துவமனைகள் அமைப்பது என்று ஆரம்பித்து, பின்னர் அந்த மக்களின் தண்ணீர் கஷ்டத்தை கண்டு இதுவரை 331 சிறு அணைகளை கட்டி விவசாயிகளை வாழ வைக்கிறார்.
அது மட்டும் இல்லை இவர் கிராமத்து பெண்களுக்காக 1980ம் வருடம் பெண்கள் சுயஉதவி குழுக்கள் அமைத்து (எல்லோரும் நினைப்பது போல் இது ஒன்றும் தி.மு.க. ஆரம்பித்தது இல்லை) இதுவரை 8220 சிறு குழுக்களும், 153990 பெண்களுக்கு முன்னேற்ற பாதை வகுத்து கொடுத்து உள்ளார்.

இவரை பற்றியும், இவரது தொண்டை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Integrated Village Development Project

இந்த மகசேசே பற்றியும், அந்த விருது பற்றி தெரிந்து கொள்ள இந்த காணோளியை காணலாம்...
பாசதலைவனுக்கு எல்லாம் பாராட்டு விழா எடுக்கும் நமது அரசு, இந்த செயற்கரிய சாதனையை செய்த, ஆசியாவின் நோபல் பரிசு பெரும் தமிழனுக்கு விழா நடத்துமா ??

No comments:

Post a Comment