Tuesday, August 21, 2012

அறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்

நமது நாடு உணவு வகைகள் எல்லாமே ஒன்று வேக வைத்தவை அல்லது 
எண்ணையில் பொறிக்கப்பட்டது.  ஆனால், வெளிநாட்டில் முக்கியமாக அமெரிக்காவில் எல்லோரும் Barbeque வகை உணவுகளை விரும்பி உண்பர். அதாவது, பச்சை மாமிசத்தை எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் தீயில் வாட்டி  தின்பதுதன் அது. இப்போது, நமது ஊரில் எல்லாம் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி பெங்களுருவில், இந்திரா நகரில் உள்ள உணவகம்தான் நாம் இப்போது காண போவது....Barbeque Nation !!
இதற்க்கு முந்தைய பதிப்பில் நீங்கள் என்னுடைய பிரேசிலின் உணவு வகைகள் என்னும் பதிவை படித்திருந்தால் இதை புரிந்து கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்காது. ஆனால், அந்த வகை உணவு எல்லா விதமான இறைச்சியும் கொண்டு இருக்கும், ஆனால் இங்கே மஷ்ரூம், சிக்கன், மட்டன் மற்றும் மீன் வகைகளே பார்பிக்யூவாக பரிமாறபடுகின்றன. நீங்கள் இங்கு முன்பதிவு செய்து சென்றால் மட்டுமே உங்களுக்கு இடம் கிடைக்கும், இல்லையென்றால் அவ்வளவுதான். ஒரு ஆளுக்கு 650  முதல் 750  வரை ஆகும், ஆனால் நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிட்டு கொள்ளலாம் !! பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...பார்பிக்யூ நேஷன்

முதலில் நீங்கள் உட்கார்ந்தவுடன் உங்களின் முன்னால் உள்ள உணவு மேசையுடன் இருக்கும் சின்ன அடுப்பில் நெருப்பு மூட்டுவார்கள் அல்லது ஒரு கொதிக்கும் கரி அடுப்பு கொண்டு வந்து வைப்பார்கள் (அதை சுற்றி சுற்றி நாங்கள் காட்டுவாசி நடனம் ஆடலாமா என்று கேட்டது தனி கதை !!), பின்னர் அந்த நெருப்பில் ஒரு கம்பியில் குத்திய மஷ்ரூம், சிக்கன், மட்டன் மற்றும் மீன் வகை உணவுகள் வைக்கப்படும். அது அந்த நெருப்பில் மெதுவாக வேக ஆரம்பிக்கும் (வெளிநாட்டில் எல்லாம் அந்த நெருப்பில் பச்சை மாமிசம் வைப்பார்கள் ), பின்னர் நீங்கள் அதை எடுத்து வைத்து உன்ன வேண்டும். ஆனால் நீங்கள் அதற்க்கு முன் பப்பெட் முறையில் இருக்கும் சாலட், ரைஸ் முதலியவகைகளை எடுத்து கொண்டு இந்த மாமிசத்தை உண்ண வேண்டும்.
In Indira nagar Barbeque nation with my friends
பஞ்ச் லைன் :
சுவை               -      அமர்க்களம் என்று சொல்ல முடியாது ஆனால், 
                                    நன்றாக இல்லை என்றும் சொல்ல முடியாது
அமைப்பு         -       நன்றாக இருக்கிறது, தயவுசெய்து ரூப் டாப் மட்டும் சென்று 
                                   விடாதீர்கள்....வேர்த்து கொட்டிவிடும்
பணம்              -       கொஞ்சம் இல்லை, நிறையவே காஸ்ட்லி !!
சர்வீஸ்           -       சூப்பர் என்று சொல்லலாம்

10 comments:

  1. நான்லாம் உள்ளூர் தவிர வேறெங்கும் போனது கூட இல்ல..நீங்க நாடு நாடா சாப்பிடறீங்க....

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்னீங்க போங்க....ஆண்டவன் இந்த வைப்பை கொடுத்து இருக்கான். இன்னும் நான் சீனா உணவுகள் போடலை, அதை போட்ட நீங்க வந்தி எடுதுடுவீங்க சார்.
      உங்களோட கோவை நேரம் பகுதிக்கு நான் ரசிகன் தலை !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. //எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் தீயில் வாட்டி தின்பதுதன் அது//, they marinade with barbecue sauce and varieties of seasoning.

      Delete
    2. ஆம் Pebble !! ஆனால் நான் சொல்ல வந்தது நமது ஊர் மசாலாக்கள். மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும், வருகைக்கும்.

      Delete
  3. சென்றமுறை பெங்களூர் சென்றபோது போகலாம் என்று முயன்றும் போக இயலவில்லை ....

    உங்களின் பதிவு என் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது ....


    தயவுசெய்து ரூப் டாப் மட்டும் சென்று விடாதீர்கள்....வேர்த்து கொட்டிவிடும்//////

    ஒரு ஆளுக்கு 650 முதல் 750 வரை ஆகும், ஆனால் நீங்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிட்டு கொள்ளலாம்////
    தகவலுக்கு மிகக்க நன்றி


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆனந்த்....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  4. Very nice blog Suresh.... My mouth started watering after reading about this delicious food.

    Let us visit one more time to enjoy the great food, pleasant service and ofcourse flash mob dance.... :)

    Thnks,
    Ramesh Gupta

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your visit and comments Ramesh Babu !!

      Delete