Sunday, August 26, 2012

மறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா

ஒரு பயணம் அது நம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் ?! நானும் எனது பெற்றோரும் சென்ற இந்த கேரளா ஆலப்புழா பயணம் ஏன் எல்லோரும் கேரளாவை "கடவுளின் இடம்" என்று சொல்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லும்.

ஆலப்புழாவின் அழகு....
அவ்வளவு பசுமையான இடம், ஆலப்புழாவின் பேக் வாட்டர்ஸ், உணவுகள் என்று ஒரு சொர்க்க பூமிதான் இது. நாங்கள் கேரலீயம் என்னும் 
ஆயுர்வேதிக் ரிசார்ட்டில் தங்கி  இருந்தோம். அது தண்ணீருக்கு மிக அருகில், 
எங்கு சென்றாலும் படகில்தான் செல்ல வேண்டும் என்ற ஒரு ரிசார்ட்.
நாங்கள் தங்கி இருந்த காட்டேஜில் இருந்து தண்ணீர் தொட்டு விடும்  தூரம்தான் 
இருந்தது .

அதோ அந்த பறவை போல....
 
நாங்கள் குளித்து முடித்தவுடன் மிகுந்த பசியாக இருந்தது. என்ன சாப்பிட கிடைக்கும் என்று சென்ற எங்களுக்கு ஒரு விருந்தே தயாராக இருந்தது.கேரளா அரிசியில் சாப்பாடு, நேந்தரங்கா சிப்ஸ், அவியல், துவையல், 
சாம்பார், மோர் குழம்பு, பாயசம் என்று எங்களது வயிறாய் நிறைத்தது.
நிறைவாய் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம், பின் எங்களது ஊர் உலாவை 
துவங்கினோம். அங்கு இருந்த கோவில்கள், படகு பயணம் என்று இனிமையான மலை பொழுதுடன் முடிந்தது.

 
நாங்கள் இருந்த படகு வீட்டினுள்ளே... 

மறுநாள் நாங்கள் ஆலப்புழாவின் புகழ்பெற்ற ஹவுஸ் போட் என்னும் படகு வீட்டுக்கு மாறினோம். இந்த படகு வீடு என்பது பல வகைகளில்,
வசதிகளில் கிடைக்கும். நாங்கள் இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய
 வீடு ஒன்று எடுதுகொண்டோம், அதற்கே 8000 ரூபாய் ஆயிற்று !! இந்த படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்து கொள்வார்கள். அவர்களே நமக்கு சமையலும் செய்து கொடுப்பார்கள். நாங்கள் படகு வீட்டுக்கு மாறும்போது மதிய சாப்பாடு நேரம், ஆதலால் அவர்கள் எங்களுக்கு மெனு சொன்னவுடன் நாங்கள் கடல் உணவுகள் கிடைக்காத என்றவுடன் ஒரு வீட்டின் முன் படகினை நிறுத்தினார்கள், அங்கு எல்லா விதமான கடல் மீன்களும் கிடைத்தன, அதை வாங்கி அவர்களுக்கு கொடுதவுகன் அவர்கள் எங்களுக்கு சுவையான விருந்து கொடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் வேம்பநாடு லேக் சுற்றும் போது மக்கள் பஸ்க்கு  காத்திருப்பது போல் அங்கு படகுக்கு காத்திருந்தது ஒரு அருமையான காட்சி. மலை சிறு சிறு தூறல்கள் போடும்போது அந்த பறந்து விரிந்த லேகிற்கு நடுவில் நிறுத்தி, உங்களை சுற்றி தண்ணீர் தண்ணீர் என்று இருக்கும் போது ஒரு அருமையான பஜ்ஜியும், மசாலா டீயும் கொடுக்கும்போது என்ன ஒரு சொர்க்கம் என்று தோன்றும்.



இப்படி நீங்கள் பயணிக்கும்போது இவர்கள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள், பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் நீங்கள் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்த பொழுதில் நாங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு கதைகளை பேசி கொண்டு இருந்தோம். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது நாங்கள் இருந்த படகும், தண்ணீரும் 
தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம், அது ஒரு கண்கொள்ளா 
காட்சி. பின்னர் உறங்கி எழுந்து காலையில் ஆப்பமும், கடலை கறியும் சாபிட்டுவிட்டு குளித்தோம். பின் அந்த படகு எங்களை மீண்டும் கேரலீயத்தில் இறக்கி விட்டது. ஒரு மறக்க முடியா பயணம்.....சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருந்தது.

மேலே இருக்கும் அந்த படம், எனது வாழ்வில் நான் ரசிக்கும் ஒன்று. இந்த படத்தை நான் பார்க்கும்போது எல்லாம் மனதில் நான் அன்று அனுபவித்த ஒரு நிம்மதி எழும். சுற்றிலும் தண்ணீர், உங்களுக்கு சூடான வெங்காய பஜ்ஜியும், மசாலா டீயும், பக்கத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள், சிறு சிறு மலை தூறல்கள் என்று இருந்த தருணம் அது. நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று இந்த ஆலப்புழா.
இந்த கானொளியில் நீங்கள் ஆலப்புழாவின் அழகினையும், படகு வீடு பற்றியும் காணலாம்...

No comments:

Post a Comment