Friday, August 3, 2012

சோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)

இசையை ரசிக்க மொழியோ, வார்த்தையோ, அறிவோ தேவையில்லை என்று எனக்கு உணர்த்தியது இந்த கென்னி ஜி அவர்களின் சாக்ஸ்போன் இசை. நம்ம ஊர் கதரி கோபால்நாத் அவர்களின் இசையை கேட்டு விட்டு, ஒரு இரவு என் நண்பனின் CD கலக்சனில் இருந்து சும்மா கேட்போமே என்று கேட்டு, இன்று அவரின் இசையின் ரசிகனாகி விட்டேன்.

இந்த இசையை நீங்கள் மேலோட்டமாக ரசிக்காமல், ஒரு நிசப்த இரவில் கேளுங்களேன்....உங்களை ஒரு ஆழ்ந்த இனிமையான உலகத்திற்கு அழைத்து செல்லும். இவரின் சாக்ஸ்போன் இசை இரவினில் வழிய, நீங்கள் இவரையும் இவரது இசையையும் நிச்சயமாக ரசிப்பீர்கள்.



No comments:

Post a Comment