Monday, August 6, 2012

அறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்

 பெங்களுருவில் பல புதிது புதிதான உணவகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன, சில உணவக விளம்பரங்கள் நன்றாக இருக்கும் ஆனால் உணவு மிக கொடுமையாக இருக்கும், சில உணவகம் பார்க்க சுமாராக இருக்கும் ஆனால் சுவையோ அலாதியாக இருக்கும். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தது இந்த "South Indies" உணவகம். இது ஒரு சைவ உணவகம், ஆனால் புதுமையான உணவுகள். இது பெங்களுருவில் இந்திரா நகரின் நூறடி ரோட்டில் உள்ளது.


ஒரு முறை நானும் எனது மனைவியும், ஞாயிறு அன்று காலையில் கோவிலுக்கு சென்று விட்டு எதாவது உணவகம் இருக்குமா என்று தேடி வந்து கொண்டு இருக்கும்போது, மழை தூவ ஆரம்பித்து விட்டது. சட்டென்று ஒதுங்க இடம் பார்த்து இங்கு ஒதுங்கினோம். வெளியிலிருந்து பார்த்தால் ஒரு வீடு போல மட்டுமே தெரியும், ஆனால் உள்ளே சென்றால் அது ஒரு அருமையான உணவகம். மழை பெய்யும் ஒரு நாளில், ஒரு நல்ல பப்பெட் முறை சைவ உணவு என்பது ஒரு அருமையான பொழுது. நல்ல வேளை மழை பெய்தது என்று எண்ண தோன்றியது.


முதலில் சூடாக இட்லி வைத்து, அதற்க்கு பொன்னிறமாக பொறிக்கப்பட்ட வடையும், மூன்று வகை சட்னியும், நீங்கள் கேட்டால் பல வகையான தோசையும், பூரியும், ஆப்பமும் என்று வரும். சாம்பார், ப்ரூட் கேசரி, சில சமயம் புதுசாக ஏதாவது என்று இருக்கும். சனி, ஞாயிறு மட்டும் காலையில் இந்த பப்பெட் முறை பிரேக் பாஸ்ட் உணவு, அதற்க்கு ஒருவருக்கு 300 வரை என்பது அதிகம்தான் என்றாலும்...ஒரு அழகிய இன்ட்டீரியருடன், சுத்தமான சவுத் இந்தியன் உணவு வகைகள், சூடாக இருக்கும் போது உங்களுக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கிறது என்று தோன்றும், விலை அதிகம் என்று தோன்றாது. அவர்களிடம் மதியமும், இரவும் புது புது உணவுகள் கிடைகின்றன. அவர்களின் மெனு கார்டு பக்கம் உங்களுக்காக கீழே.
அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...South Indies



No comments:

Post a Comment