Tuesday, August 7, 2012

ஆச்சி நாடக சபா - Waterworld ஷோ

ஒரு ஷோ நடத்தும்போது அதற்கு மிக பெரிய ஒத்திகை தேவை, அதுவும்
உலக அளவில் பிரபலமான ஷோ என்றால் அதற்கு இன்னும் மெனகெட
வேண்டும். நீங்கள் இங்கு பார்க்க போவது சிங்கப்பூரின் யுனிவேர்சல் ஸ்டுடியோவில் நான் பார்த்த "வாட்டர் வேர்ல்ட்" ஸ்டன்ட் ஷோ !
Water world movie poster
உலகம் ஒரு நாளில் தண்ணீரில் மூழ்கும்போது, மிக சில நில பரபுக்களே மிஞ்சி இருக்கும். அப்போது மனித இனத்தில் தப்பி பிழைத்த சிலர் அந்த நிலங்களில் வாழும்போது நடக்கும் சம்பவங்கள்தான் இந்த "Waterworld" படத்தின் கதை. 1995 இல் வந்த இந்த படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் மிக பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் ட்ரைலர் உங்களின் பார்வைக்காக இங்கே...

இந்த படம் ஹிட் அடித்தவுடன் நமது யுனிவேர்சல் ஸ்டுடியோ மக்கள் அதை ஒரு ஸ்டன்ட் ஷோவாக மாற்றிவிட்டனர். ஆனால், காட்சி படுத்திய
விதத்தை நீங்கள் பார்த்தால், அது உங்களின் முன் நடக்கும் ஒரு படம்
போலத்தான் தெரியும், அப்படி ஒரு உழைப்பு. இந்த 40 நிமிட ஷோவுக்காக அவர்களின் பிரமாண்டமான உழைப்பு கண்டிப்பாக உங்களை மலைக்க வைக்கும் ! 
Water world set - Villain & Heroine
கதைப்படி வில்லன் (ஒற்றை கண் ஆசாமி) அந்த கோட்டைக்குள் வந்து ஹீரோயினை  
(குட்டை பாவாடை!!) கடத்தி கொண்டு போகிறார், அப்போது ஹீரோ வந்து அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து கடைசியில் ஹீரோயினை எப்படி கிஸ் அடிக்கிறார் என்பதே. அப்போது அங்கு நடக்கும் சண்டை, துப்பாக்கி சூடு, வாட்டர் ஜெட் சாகசங்கள் எல்லாம் படு துல்லியம் !
With the crew actors - Amazing performance guys !!

இந்த ஷோ முழுவதும் இங்கு உங்களுக்கு வீடியோ வடிவில்...பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்.


No comments:

Post a Comment