Sunday, September 9, 2012

100'வது பதிவு - நன்றியுடன் "கடல் பயணங்கள்" !

எனது எந்த பதிவிக்கும் நான் இப்படி வார்த்தைகளை தேடியதில்லை, மனதிலிரிந்து வரும் வார்த்தைகளுக்கு எனது விரல் நுனியின் மூலம் தட்டச்சு செய்து உதவியிருகிறேனே தவிர இன்று நடப்பது போல் என் மனமும், வார்த்தைகளும் என்னை இப்படி அலைகளித்ததில்லை !!


இந்த பதிவில் நான் எப்படி இன்று வரை என்னை ஆதரித்த, கொண்டாடிய, மகிழ்ந்த, தவறை திருத்திய,  குட்டிய எனது அருமை பதிவுலக வாசகர்களுக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எத்தனையோ ப்ளாக் நான் படித்திருந்தாலும் சட்டென்று 14-ஆகஸ்ட் 2012 அன்று ஏதோ ஒரு தைரியத்தில் எனது முதல் பதிவை தொடங்கினேன், இன்று 100-வது பதிவை எழுதுகிறேன். அன்று ஆரம்பித்தபோது எனக்கு 100-வது பதிவை எல்லாம் நான் தொடுவேனா என்றிருந்தது,  ஆனால் இன்று உங்களின் ஆதரவால் அதை எட்டிவிட்டேன் எனும்போது "நன்றி நண்பரே !!" என சொல்வதை தவிர என்ன செய்வது.


எப்போதும் பதிவிட்டவுடன், அதை படித்துவிட்டு கருத்தை சொல்லும்
ரமணி சார்,
ஆனந்த்,
கோவை நேரம்,
கவிதை வீதி சௌந்தர்,
கோவி,
க்ரிஷ்,
காட்டான் 
அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள், உங்களது கருத்துக்கள் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனது பதிவுகளை அவ்வபோது படித்து கருத்துரைத்த, என்னை சில சமயங்களில் திருத்திய
தமிழ்வாசி பிரகாஷ், S.P.ராஜ்,பாரதி சுப்பையா, மணிகண்டன், வல்லிசிம்ஹன், துளசி கோபால், ரங்குடு, ஜீவன் சிவம், வடுவூர் குமார், கோமதி அரசு, பழனி கந்தசாமி, சேக்காளி, தனிமரம், ராஜ நடராஜன், சாமி, சங்கவி, சகாதேவன், அமுதா கிருஷ்ணன், முரளிதரன், கோவை கவி, பந்து, மௌன குரு, வலைஞன்,  ராம் டெல்லி, காரிகன், இக்பால் செல்வன், டி டி பியன், இன்றைய வனம், தொளிர்கலம் குழு, யாமினி கெளரி, விச்சு, தேவா, அசோக் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரிதாகுக. உங்களின் கருத்துக்கள் என்னை மென்மேலும் ஊக்கபடுத்தி, எனது எழுத்துக்களை செதுக்கியது என்றால் அது மிகையாகது. அவ்வப்போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை ஊக்கபடுத்திய எனது நண்பன் ஜெகதீசனுக்கும், என்னை ஒரு அதிகாலையில் ஜப்பானில் இருந்து எனது ஒவ்வொரு படைப்பையும்
பாராட்டிய வேதப்ரியா பாலுவுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகள்.

என்னை தொடரும் எனதன்பு நண்பர்களும், எனது பதிவை விரும்பும்
தமிழ்வாசி பிரகாஷ்,
மகேஸ்வரன்,
சிவா,
கோவை நேரம்,
ரமணி சார்,
வின் முகிலால்,
ஆனந்த் குமார்,
கோவி,
அருணன்,
காட்டான்,
பாலாஜி விஜயன்,
ஜகதீஸ்வரி சேகர்,
அமுதா கிருஷ்ணன்,
ராஜேஷ் குமார்,
இக்பால் செல்வன்,
தேவா 
மற்றும் எனது தம்பி பாண்டுவுக்கும்....என்னை எப்போதும்  ஆதரித்து, உற்சாகபடுத்தும் என் அருமை மனைவிக்கும் எனது அன்பு நன்றிகள் உரிதாகட்டும்.

எனது படைப்புக்களை மொழி புரியாததால் வாசிக்க முடியாவிட்டாலும் எனது முயற்சியை பாராட்டிய சுனந்தா, சுஷ்மிதா மற்றும் பல பல எனது நண்பர்களுக்கும், எனது நன்றிகள். இவர்கள் எல்லாம் முகம் தெரிந்தவர்கள், ஆனால் இன்றும் எனது படைப்புக்களை தினமும் படிக்கும் பல வாசகர்களையும் நான் நன்றியோடு நினைத்து பார்கிறேன்.


எனது பதிவின் தலைப்பின் கீழே "எனக்கு பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்களின் நண்பனாக விருப்பம்" என்று சொல்லி இருந்தேன், இன்று நிஜமாகவே உங்களை எல்லாம் என் நண்பர்களாக அடைந்ததற்கு மகிழ்கிறேன். நன்றி !!

*************************************************************************************

ஒவ்வொரு முறை வலைபதிவிடும்போதும் அது என்னை முழுமையாக பிரதிபலிக்கும் வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறேன். நான் ரசித்த ஒவ்வொன்றையும் மற்றவரும் ரசிப்பார்கள் என்ற கட்டாயம் இல்லை எனினும் ஒரு குழந்தையின் சிரிப்பை எவரும் ரசிப்பர் அதற்க்கு விதிவிலக்கு இல்லை, அதுபோலவே எனது பதிவும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.என்னை பார்க்கும் எனது நண்பர்களும், பலரும் நீ இப்படி எல்லாம் எழுதுவாயா என்று வியக்கும்போது நானும் அப்படியே என்னை வியக்கிறேன் என்பேன். உண்மைதான், எனது இன்னொரு பக்கத்தை எனக்கு காட்டியது இந்த வலைபதிவுகள். கோர்வையாய் வார்த்தை வருமா என்று சந்தேகம் எனக்கு இருந்தபோது எனக்கு ஊக்கம் அளித்தவள் என் அன்பு மனைவி. அவள் எள்ளி நகையாடி இருந்தால் என்றால் இந்த பதிவு சாத்தியமில்லாமல் போய் இருக்கும்.


பலரின் வலைதளத்திற்கு போய் படிக்கும்போதும், அவர்களின் ஹிட் கணக்கை பார்க்கும்போதும் எனக்கு வியப்பாக இருக்கும். பல பல வருடங்கள் அவர்களுக்கு எப்படி எழுத முடிகிறது என்று. ஆனால் இப்படி சென்று படிக்கும்போது எனது உலகம் விரிகிறது என்றால் அது மிகையில்லை. ஒவ்வொருவரும் எழுதும் விஷயம் எனது மனதுக்கு நெருக்கமாய் உணர்கிறேன். முகம் தெரியாமல் பல நண்பர்கள் இன்று எனக்கு !!

***********************************************************************************

நான் பதிவிட ஆரம்பித்தபோது தமிழ்மணத்தில் 1471-ம் வரிசையில் இந்த கடல் பயணங்கள் இருந்தது, ஆனால் இன்று அது 297 !! அது மட்டும் இல்லாமல் இன்று பத்தாயிரம் ஹிட்டையும் கடந்து செல்வது என்பது என்னை பொறுத்த வரை ஒரு சாதனையே ஆகும் !

இதை செய்ய உதவிய, ஊக்கமளித்த அனைவருக்கும் எனது
நன்றி !! நன்றி !! நன்றி !!

13 comments:

 1. வணக்கம் நீங்கள் பதிவை எழுதியவுடன் கண்டிப்பாக படிப்பேன் அத்தனை பதிவுகளும் அருமையாக எழுதுகிறீர்கள். உங்களை பாராட்டுவதற்க்கு எனக்கு நேரம் இருக்காது ஏன் என்றால் நானும் பதிவுகளை எழுதிக்கொண்டு உள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள் விரைவில் 1000 பதிவை தொட எனது வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ராஜேஷ்சுப்பு.

  http://astrovanakam.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜேஷ்சுப்பு !! உங்களது பதிவுகளையும் நான் விரும்பி படிக்கிறேன்...191 தொடர்புகளுடன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு ஜோதிடம் பற்றிய பதிவுகளும் அருமையிலும் அருமை !

   உங்களது தொடர் உற்சாகம்தான் என்னை எழுதும்படி தூண்டுகிறது ! நன்றி !

   Delete
 2. சார், எனக்கும் ஒரு நன்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்களளுக்கு நன்றி சொல்வது எனது கடமை SP ராஜ் !! நீங்கள் கொடுக்கும் உற்சாகம்தான் என்னை எழுத தூண்டும் டானிக் !! உங்கள் வாக்குப்படி நடக்கட்டும் !!

   தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி !!

   Delete
 3. மேலும் மேலும் நீங்கள் எழுதி பிரபல பதிவர் ஆக வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 4. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுரேஷ்....! இன்னும் நிறைய எழுதுங்கள்... !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தேவா !! உங்களது ஞானாலயா ஆய்வு நூலகமும், warriyor பதிவுகளும் கருது செறிவு மிக்கவை, என்னை மிகவும் கவர்ந்தது அந்த கஞ்சிரா பதிவு.

   உங்களது தொடர் உற்சாகம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது, தங்களது வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 5. 100வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
  உண்மையாகவே உங்கள் பதிவினைப் படிக்கையில்
  தாங்கள் ரசித்ததை படிப்பவர்களும் ரசிக்கும்படிஎழுதி இருப்பது
  எனக்கு ரொம்பப் பிடிக்கும்
  நீங்கள் ரசித்ததை நானும் உணர்வேன்
  அதிகமாக மொழி லாவகம் அது எது என மெனக்கெடாமல்
  இயல்பாக எழுதுவது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்
  தொடர்ந்து வருகிறோம்
  இன்னும் ஆயிரம் ஆயிரமாய் பதிவுகள் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் !! உங்களது தொடர் பின்னூடமும், கருத்துக்களும் என்னை மென் மேலும் உற்சாகபடுத்தி செதுக்குகிறது ! உங்களை நேரில் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

   உங்களது நல்வாழ்த்துக்களுக்கு நன்றி !

   Delete
 6. All the best suresh, I am sure you will hit 1000th blog very soon & I wish it will be in 2013.

  A proud friend,
  Ram , Singapore

  ReplyDelete
  Replies
  1. Thank you so much Ram, your constant encouragement helps me to write...wishing to meet you soon.

   Delete
 7. சார் ... நீங்கள் என்னை நினவுகூர்விர்கள் என்று நான் நினைக்கவே இல்லை .... மகிழ்ச்சியாக உள்ளது

  உங்கள் செஞ்சுரிக்கு எனது வாழ்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆனந்த, தொடர்ந்து உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் !!

   Delete