விமான பயணம் என்பதே சிலருக்கு அதிசயமான அனுபவம், அதிலும் நீங்கள் உலகமே வியக்கும் அதிவேக, மிக பெரிய விமானத்தில் பயணம் செய்தால் அது மறக்க முடியா பயனமாகதானே இருக்கும் !! இதுவரை 200 முறைக்கு மேல் விமான பயணம் செய்து விட்டேன், ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த ஏர்பஸ் 380-இல் பயணம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய உங்களுக்கு லேசில் வாய்ப்பு கிடைக்காது, ஏனென்றால் பிளைட் முடிவு செய்வது உங்கள்
கையில் இல்லையே !?.
![]() |
ஏர் பஸ் A 380 - ஒரு அதிசயம் ! |
![]() |
ஏர் பஸ் A 380 ரன்வேயில் நிற்கும்போது - மற்ற விமானத்துடன் பாருங்கள் !! |
ஏன் அப்படி ஒரு சிறப்பு இந்த ஏர்பஸ் 380-க்கு மட்டும் ?? இந்த உலகில்
முதல் மிக பெரிய, மாடி கொண்ட, டபுள் டெக்கர் விமானம் இது மட்டும்தான். இதில் நான் சிங்கப்பூரில் இருந்து மெல்போர்ன் நகரம் வரை நான் பயணம் செய்தது நிஜமாகவே ஒரு மறக்க முடியாத அனுபவம்.
(திரும்பவும் மெல்போர்ன் டூ சிங்கப்பூர் பயணமும் செய்தேன்...அதாவது டபுள் ஜாக்பாட் !!)
![]() |
பாருங்கள் என்ன என்ன உள்ளே உள்ளது என்று !! |
![]() |
இதுவரை பெரிது என்று சொல்லப்பட்ட போயிங் 747-வுடன் |

![]() |
கடைசி இருக்கையில் இருந்து... |
![]() |
எகானமி கிளாஸ் வசதிகள் |
இதன் உள்ளே எல்லாம் புதிய டெக்னாலஜிதான் !! நீங்கள் உங்கள் USB கொண்டு பாட்டு அல்லது படம் பார்த்து கொள்ளலாம், போன் பேசலாம், பெரிய சீட்டுகள். மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்த்தால் தெரியும் இது எவ்வளவு நீளம் என்று. உலகில் வெறும் 80 விமானம் மட்டுமே இதுபோல் உள்ளது, அவர்களுக்கு ஆர்டர் குவிந்துகொண்டு இருக்கிறது. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ஏர்பஸ் 380
![]() |
A 380 உள் தோற்றம் |
இந்த வீடியோவில் நீங்கள் இந்த விமானத்தை எப்படி செய்கிறார்கள் என்றும், இதை பற்றியும் நிறைய தெரிந்து கொள்ளலாம்...
அறியதொரு தகவல்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
நன்றி சௌந்தர் !!
Deleteஉங்கள் அனுபவத்தை அழகாக வர்ணனையுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !
Delete