Tuesday, September 11, 2012

அறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி, என்னுடைய  ஒரு பகுதியை 
சுவையானதாகியது இந்த மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம் என்றால் அது மிகையாகது. நான் தெப்பகுளம் பிஷப் ஹீபர் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு 
படித்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில் இருந்த  
மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்தான் எனக்கு முதல் பழக்கம். அவர்களின் ப்ரூட் சாலட் மிக்ஸ் என்பது இன்னமும் நா ஊற வைக்கும் ஒரு சீக்ரெட் ரெசெபி !!


அவர்களின் வெண்ணிலா ஐஸ் கிரீம் சாப்பிடும்போது ஏனோ பால்கோவாவை 
வெட்டி எடுத்து சாபிடுவது போலவே நீங்கள் உணர்வீர்கள். அவர்களின் கிரேப் 
சர்பத் என்பது இன்னமும் எனது நாவில் இருக்கும் சுவை. அவர்களின் ப்ரூட் 
சாலட் வித் ஐஸ் கிரீம் வரும்போது உங்களது அனைத்து புலன்களும் விழித்து கொள்ளும். மெல்ல அதை மிக்ஸ் செய்து விட்டு வாயில் எடுத்து 
வைத்தால்....ஆகா என்ன சுவை போங்கள் !!


 அன்று அவர்களிடம் மேலே உள்ளது மட்டும் கிடைத்தது, ஆனால் இன்று 
காலத்திற்கு ஏற்ப மாங்கோ, பட்டர் ஸ்காட்ச் என்று பல சுவைகளில் 
கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் இன்று பிரட் வகைகளும் 
கிடைக்கின்றன. இந்த கடையின் பெயர் அவள் விகடனில் வந்துள்ளதை அங்கு இருந்த கட்டிங்கில் கண்டேன் !


எனக்கு தெரிந்து இந்த ஐஸ் கிரீம் கடை திருச்சி மெயின் கோர்ட் கேட்டிலும், மெயின் போஸ்ட் ஆபீஸ் அருகிலும் இருக்கிறது. இந்த கடையை நீங்கள் திருச்சி வழியாக செல்லும்போது அல்லது திருச்சிக்கு செல்லும்போது தேடி சென்று சாப்பிடலாம்....நான் கேரன்டீ !! இருபது வருடங்களுக்கும் மேலாக அதே சுவை. கீழே அங்கு கிடைக்கும் வகைகளை நீங்கள் காணலாம்.

பஞ்ச் லைன் :
சுவை               -      அமர்க்களம், கண்டிப்பாக ப்ரூட் சாலட் வித் ஐஸ் கிரீம் மிஸ் செய்யாதீர்கள்.
அமைப்பு         -       ரொம்ப சின்ன இடம், பார்கிங் வசதி கிடையாது என்பது ஒரு மிக பெரிய குறை.
பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை !
சர்வீஸ்           -       ரொம்பவே சூப்பர் !

12 comments:

  1. //நான் தெப்பகுளம் பிஷப் ஹீபர் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு
    படித்து கொண்டிருந்தபோது//

    நானும் அங்குதான் படித்தேன். நானும் அந்த ஐஸ்கிரீம்க்கு அடிமை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா உலகநாதன், உங்களிடம் பேச நிறைய விஷயம் உள்ளது போல !! ஒரு நாள் நாம் சந்திப்போம்.....தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

      Delete
  2. நண்பரே,

    மைக்கேல்ஸ்! மறக்க முடியாத கடை. உங்கள் பதிவுக்கு நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீ !! உமநியிலேயே நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவை !!

      Delete
  3. http://www.kovaineram.com/2011/07/blog-post_1138.html....எனது பதிவில்..

    நன்றாக இருக்கிறது உங்கள் நடை...

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க இதுக்கு முன்னாடியே இதை பற்றி எழுதி இருக்கீங்களா !! நன்றி நண்பரே !!

      Delete
  4. அட நம்ம ஊரா நீங்க, நானும் ஒவ்வொரு வருஷம் விடுமுறைக்கு போகும்போது மறக்காமல் சாப்பிடுவது உண்டு(மனைவிக்கு தெரியாமல்-நான் டைபடிக் ஆனதால்).
    நான் சிங்காரத்தோப்பில் உள்ள கடையில் சாப்பிடுவேன்,உட்கார இடம் கிடைப்பதே கஷ்டம்,
    நான் typing படித்தது போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில் உள்ள மாடியில் அப்போது தினமும் மாலைநேரம் டய்பிங் கிளாஸ் முடிந்து வரும்போது சாப்பிடுவதுண்டு,சிங்காரத்தோப்பில் பூம்புகார் எதிரே தள்ளு வண்டியில் ஜிகர் தண்டா கிடைக்கும் குடித்திருகிறிர்களா. நல்ல சுவை.
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    azeem basha- jeddah

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, ஆம் சிறு வயது நினைவுகளில் ஐஸ் கிரீம் பற்றி நினைக்கும் போது இந்த மைகேல் மற்றும் ஸ்டார் ஐஸ் கிரீம் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.

      நீங்கள் டியாபெடிக் என்று சொல்லி உள்ளீர்கள்....எனது அம்மாவுக்கும் அதுதான். அவர் ஒரு சத்து மாவை குடிபதனால் நன்றாக இருக்கிறார், தகவல் தேவை பட்டாள் எழுதுங்களேன்.

      Delete
  5. அஞ்சு வருஷம் திருச்சி சட்ட கல்லூரியில் படிதேன். பல முறை கூட்டமா நண்பர்களுடன் சென்று சாப்பிட்ட மறக்க முடியாத கடை. மிக மிக கம்மியான விலை அப்போதெல்லாம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் மோகன்....குறைந்த விலை, நிறைந்த தரம். இன்றும் அந்த ப்ரூட் சாலட் சுவை நாக்கில் இனிக்கும். உங்கள் ஊரில் இது போல் உண்டா ?

      Delete
  6. None of the other branded ice creams can replace Micheal 's ice cream...

    ReplyDelete
  7. உங்கள் தளத்தில் அடிக்கடி வந்து நுனிப்புல் மேய்ந்து போகிறவன் நான். இன்றுதான் இப்பதிவைக் கவனித்தேன். நானும் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளிக்காரன் தான்! 11 மற்றும் 12 வகுப்புகளை அங்குதான் வால்ஸ் விடுதியில் தங்கிப் படித்தேன்.

    மைக்கேல்ஸ் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை, விடுதி சன்னலில் இருந்து யாரோவொரு மாணவன் சைகையில் ஏதோ சொல்ல, எங்களை எல்லாம் விசாரித்த சம்பவம் தான் இப்பதிவைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது.

    சிங்காரத் தோப்பில் நியூ சென்சுரி புத்தகக் கடைக்கு அருகில் மைக்கேல்ஸின் இன்னொரு கடை இருக்கிறது.

    - ஞானசேகர்

    ReplyDelete