Wednesday, September 12, 2012

புதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் !!

ஒரு முறை எனது நண்பர் ஒருவர், எனது பதிவை விரும்பி படிப்பவர் என்னை பார்க்க வந்து இருந்தார். உலகெல்லாம் என்ன உணவு ஸ்பெஷல் என்று எழுதும் நீ நமது ஊர் ஸ்பெஷல் எதுவும் எழுதுவது இல்லையா என்று கேட்க நானோ ஒவ்வொரு ஊர் ஹோட்டல் பற்றி எல்லாம் எழுதுகிறேனே என்றேன்.


அப்போது அவர் பால்கோவா எடுத்து கொடுத்து சாப்பிட சொன்னார்....ம்ம்ம் அருமையான சுவை. அது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அவர் என்னிடம், இதுதான் நமது ஊர் ஸ்பெஷல், நீ உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமென்றாலும் பால்கோவா சாப்பிட்டு இருக்கலாம், ஆனால் இந்த ஊர் பால்கோவாவுக்கு என்று ஒரு சுவை உண்டு. நீ எந்த ஊர் ஹோட்டல் பற்றி எழுதினாலும் அது அந்த ஊர் ஸ்பெஷல் ஆகி விடாது, இதுதான் ஸ்பெஷல் என்றபோது இந்த தொடர் பதிவு பற்றி எழுத தோன்றியது.


 
அவர் சென்ற பின்னர், ஒவ்வொரு ஊருக்கும் என்ன ஸ்பெஷல் என்று கண்டுபிடித்தேன். பின்னர் அந்த ஊருக்கு செல்லும்போது எல்லாம் அதை தேடி அலைய ஆரம்பித்தேன், அதில் பல பல சுவாரசிய அனுபவங்கள், சில சங்கடங்கள், சில வேதனைகளும் கூட. அதை எல்லாம் இனிமேல் நம்மூர் ஸ்பெஷல் என்று எழுதலாம் என்றிருக்கிறேன், வழக்கம் போல உங்களின் உற்சாகமான பின்னூட்டங்களும், வரவையும் எதிர்பார்கிறேன்.

அடுத்த வாரம்.....திண்டுக்கல் பூட்டு !!


4 comments:

  1. நல்ல வித்தியாசமான சிந்தனை
    நாங்களும் அறியாத பல தகவல்கள் அறிய வாய்ப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார், கண்டிப்பாக இந்த பகுதியை நீங்கள் ரசிப்பீர்கள்....நான் தேடி போன பொது பல ஆச்சர்யங்கள், அதிர்சிகள் !!

      Delete
  2. குட்.நல்ல முயற்சி.ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் இருக்கும் புதுப்பட்டி என்னும் (வத்ராயிருப்பு கலசலிங்கம் காலேஜ் தாண்டி) சிறிய கிராமத்தில் விற்கும் பால்கோவா போல எங்கேயும் சாப்பிட்டதில்லை.

    திண்டுக்கல் பூட்டு,சேஷைய்யர் கடை ஜிலேபி,கத்திரிக்காய்,பலுப்பாவற்காய்,தலப்பாக்கட்டி,வேணு பிரியாணி ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி....தொடர்ந்து இதை போல் தகவல்கள் தந்தால் எனக்கு உதவியாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் எனக்கு அனுப்ப முடியுமா ??

      இந்த பகுதியை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் !

      Delete