Thursday, September 13, 2012

ஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்

இதுவரை நான் எழுதிய "ஆச்சி நாடக சபா" பதிவுகளில் நீங்கள் நான் நேரில் சென்று ரசித்ததை பார்த்தீர்கள், ஆனால் சில நேரங்களில் நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முடியாமல் போன சில தியேட்டர் ஷோவ்களை நீங்கள் இங்கே காண போகிறீர்கள். இந்த பதிவின் மூலம் சினிமாவையும் தாண்டி உங்களை வசீகரிக்கும் கலை என்று ஒன்று உண்டு என்று நீங்கள் உணர்ந்தாலே போதும் !! நமது ஊர்களில் மேடை நாடகம் மற்றும் இசை கச்சேரிகளை தவிர வேறு எதுவும் பெரிதாய் இல்லை !


நமக்கு எல்லோருக்கும் ஸ்பைடர்மன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும், அதை நாம் சிறு வயதில் காமிக் புத்தகங்களில் படித்திருக்கிறோம், பின்னர் அது திரைப்படமாய் வந்தது. அந்த ஸ்பைடர்மன் கதைகளையும், இசையையும், மேடை நாடகத்தையும் இணைத்தால் எப்படி இருக்கும் !! இதை நீங்கள் கற்பனை செய்து பார்த்தாலே உங்களுக்கு முதுகு தண்டு சில்லிக்கும் இல்லையா ??!! அதுதான் "ஸ்பைடர்மன் - டர்ன் ஆப் தி டார்க்" ஷோ !


படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளில் ஸ்பைடர்மன் வானத்தில் பறப்பது எளிது, ஆனால் நிஜத்தில் அந்த த்ரில் கொண்டு வர முடியுமா என்றால் முடியும் என்று சாதித்து காட்டியிருகிறார்கள். ஒரு சிறிய உதாரணம் பார்போம்....ஸ்பைடர்மன் உருவாவதற்கு ஒரு சிலந்தி கடித்ததுதான் காரணம், படங்களில் க்ளோஸ் அப் காட்சிகளில் அதை சுலபமாக காட்டலாம், ஆனால் மேடை நாடகத்தில் எப்படி ஒரு சிலந்தியை காட்டுவது ?? அது மேடைக்கு கீழே இருக்கும் ரசிகர்களுக்கு எப்படி தெரியும், ஒரு சின்ன சிலந்தியை எப்படி தூரத்தில் இருந்து பார்க்க முடியும் ? இது போல சாவல்களை எல்லாம் எதிர்கொண்டுதான் இந்த டீம் ஜெயித்திருகிறது !! இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.


இன்னும் இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், பார்க்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு....5 நிமிடம் ஓட கூடியது.


ஸ்பைடர்மன் என்பது ஒரு காமிக் பாத்திரம், அதை நமது கண் முன்னே கொண்டுவந்து அதை தியேட்டர் ஆர்ட்ஸ் ஆக்கி இருப்பது சுலபம் இல்லை, நீங்கள் இதை நேரில் பார்க்க வேண்டுமென்றால் ஒரு குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை என்பது 2000 ரூபாய் !! நமது ஊரில் எல்லாம் இசை வெளியீடு அல்லது ஸ்டார் நைட் என்று மட்டும் செய்வார்கள்....நினைத்து பாருங்கள் நமது சூர்யா இந்த நாடகத்தில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் !! ம்ம்ம்ம்......நமக்கெல்லாம் அது கிடைக்காது, ஆனால் வெளிநாடுகளில் எல்லாம் பிரபல நடிகர்கள் கூட இப்படிப்பட்ட மேடை நாடகங்களில் நடிப்பார்கள் !





No comments:

Post a Comment