Sunday, September 16, 2012

நான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)

கதவு - இதை படித்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது. இந்த நகரத்து வாழ்கையில் எல்லா கதவுகளும் ஒன்றாகவே இருக்கின்றன, சில இடங்களில் இரும்பு கதவின் பின் ஒரு மர கதவு என்று இரண்டு கதவுகள், சில கதவுகள் கலைநயம் மிக்கவை, சில கதவுகள் பாரம்பரியமானவை, சில கதவுகள் பணம் இருப்பதை பறைசாற்றும், சில கதவுகள் ஏழ்மையை, சில கதவுகள் நம்மையே காட்டும், இப்படி கதவுகள் பல பல கதைகளை சொல்லும், ஆனால் நமக்குத்தான் அதை நின்று படிக்க நேரம் இல்லை. சில ஊருக்கு சென்றால் அந்த தெருவில் உள்ள வீடுகள், கதவுகள் நம்மை பின்னோக்கி இழுத்து சென்று இதுதான் நமது பாரம்பரியம் என்று காட்டும்.
கே.ஆர்.சந்தான கிருஷ்ணன், இந்த பெயரை நானும் பல காலம் வரை கேள்விப்பட்டதில்லை, அவரது படைப்புக்களை பார்க்கும் வரை. இவரது படைப்புகள் வீட்டின் முகப்பை காட்டும், அதில் இருந்து நமக்கு கிளம்பும் கற்பனைகள் ஏராளம். கதவின் சிறிய வேலைபாடுகள், பூட்டுக்கள், வெளி சுவர்கள் என்று இவரது ஓவியத்தில் வண்ணங்கள் புகுந்து விளையாடும்.

பொதுவாக ஓவியம் என்பது மனிதர்கள், இயற்கை என்று பார்த்து பார்த்து இருந்த எனக்கு பளிச்சென்று எனது கற்பனையை தூண்டிய ஓவியம் என்றல் இதுதான். இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Santhana Krishnan










No comments:

Post a Comment