Tuesday, September 18, 2012

அறுசுவை - சென்னை "சிம்ரன்'ஸ் ஆப்ப கடை"

இந்த முறை நான் சென்னை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் இருந்தே நிறைய தேட ஆரம்பித்தேன்.....அட நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும்என்றுதான். அதில் இந்த பேரே
என்னை ரொம்ப கவர்ந்தது !!  நண்பர்களிடம் சொல்லிய போது அவர்களும் இதை பற்றி கேள்வி பட்டு இருந்ததாகவும், நல்ல விதமாக சொன்னதும் எனக்கு நாக்கு ஊற செய்தது !! 2002-இல் தொடங்கப்பட்ட இந்த கடை இன்று சென்னையிலும், துபாயிலும் உள்ளதாம். நாங்கள் இவர்களின் வேளச்சேரி (பஸ் ஸ்டாண்டுக்கு சிறிது தூரத்தில், மெட்ரோ வாட்டர் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ளது) கடையில் சாப்பிட சென்றோம். நன்கு விசாலமான இடம் !

இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...சிம்ரன்'ஸ் ஆப்ப கடை



உள்ளே நுழைந்தவுடன் சர்வர் வந்து என்ன வேண்டும் என்றவுடன், ஆப்பம் என்றவுடன் "எந்த வகை ?" என்ற கேள்வியில் இருந்து உங்களுக்கு ஆச்சர்யம் ஆரம்பம் ஆகும். உங்களது மெனு கார்டின் முதல் பக்கத்தில் உள்ள ஆப்ப வகைகள் எல்லாம் இப்படி எல்லாம் இருக்குமா என்று உங்களை சர்வ சத்தியமாக எண்ண வைக்கும். இவர்களிடம் சாதா, முட்டை, மசாலா முட்டை, சீஸ், பன்னீர் சீஸ், சிக்கன் கீமா, மட்டன் கீமா, சீஸ் முந்திரி, ரங்கோலி மற்றும் ப்ளவர் என்று இத்தனை வகைகள் !! இது இல்லாமல் இன்னும் பல வகை சைடு டிஷ் வேறு.....கடைசியில் முழு மெனு கார்டும் உள்ளது !! நாங்கள் மொத்தம் மூன்று ரௌண்டுகள் வித விதமாய் ஆப்பம் மட்டுமே ஆர்டர் செய்து ஆட்டுகால் பாயா, சிக்கன் வறுத்த கறி மசாலா என்று வைத்து சாபிட்டோம் !!




இடத்திலிருந்து...முட்டை மசாலா, பன்னீர் சீஸ், ரங்கோலி, ப்ளவர் ஆப்பங்கள் !

எனது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் முகத்தில் தெரிகிறதா !
 முடிவில் வயிறு நிறைய சாபிட்டவுடன் என்ன வகையான டிசர்ட் ஆர்டர் செய்யலாம் என்று யோசித்து யோசித்து எங்களுக்கு செறித்து விடும் போல் இருந்தது....அவ்வளவு வகையான இனிப்பு, ஜூஸ், மில்க் ஷேக் வகைகள் ! கடைசியில் காரட் அல்வா, கேசரி, ப்ரூட் சாலட் வித் ஐஸ் கிரீம், குலாப் ஜாமூன் என்று வகை வகையாக ஆர்டர் செய்து எல்லோரும் பகிர்ந்து உண்டோம் !!
பஞ்ச் லைன் :
சுவை               -      ரொம்பவே சூப்பர் !! வித விதமான ஆப்பங்கள் ஒரு ருசியான அனுபவம் !

அமைப்பு         -       நல்ல பெரிய இடம், ஆகார் நிறுத்தும் வசதி, குளிர்ச்சியான - லிப்ட் வசதியுடன் கூடிய இடம் !!


பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை ! எங்கள் ஆறு
பேரும் வயிறு நிறைய சாப்பிட 1800 ரூபாய் ஆனது  ! விலை பட்டியல் கீழே உள்ளது, பாருங்கள் !
சர்வீஸ்           -       சூப்பர் !  











4 comments:

  1. நன்று...போகனும் என்று நினைத்த ஹொட்டல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, ஒரு முறை கோவை வரும் பொது உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது !!
      உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  2. Enakke saapita Mathiri irukku suresh. Thanks, Will try in my next trip to chennai,

    Ram, s'pore

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ராம் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete